தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகம்:குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகமாக உள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகம்:குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்
X

மல்லூர் அருகே தனியார் தீம் பார்க்கில், உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு, ரூ. 4 லட்சம் இழப்பீட்டை, தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் ஆனந்த் வழங்கினார். அருகில் மாவட்ட கலெக்டர் உமா.

தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகிறது. இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு இருப்பதால் புகார்கள் வருகின்றன என நாமக்கல்லில் தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள தனியார் தீம் பார்க்கில், கடந்த 11ம் தேதி ஒரு சிறுவன் உயிரிழந்தான். இதுதொடர்பாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த் தீம் பார்க்கிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

பின்னர் அவர் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராசிபுரம் அருகே, தனியார் தீம்பார்க்கில் சேலத்தை சேர்ந்த 11 வயது சிறுவன் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. மேலும், சிறுவன் இயற்கையாக இறந்துள்ளார் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய சட்டத்தின்படி, தனியார் தீம் பார்க் நிறுவனம், சிறுவனை இழந்த பெற்றோருக்கு ரூ. 4 லட்சம் இழப்பீடு வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது. தீம் பார்க்கில் உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் மேம்படுத்துவது தொடர்பாக அதன் நிர்வாகத்தினருக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரத்தில் பெண் குழந்தைகளிடம் இரு விரல் பரிசோதனை நடைபெற்றது உண்மை. இதுதொடர்பாக தமிழக கவர்னர் கூறியது உண்மை. இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஆதாரம் ஆணையத்திடம் உள்ளது.

திருச்சியில் ஒரு உள்ள பள்ளியில் ஒரு மாணவன் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், அவரை சாப்பிட விடுவதில்லை என புகார் எழுந்தது. இதுதொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது. நீச்சல் குளம், தீம்பார்க்கில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வழிமுறைகள் ஆணையம் மூலம் விரைவில் வழங்கப்பட உள்ளன.

குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மூலம் என்சிபிஆர் அமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் குழந்தைகளின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் விசாரணை நடத்தி அன்றே தீர்ப்பு வழங்கப்படும். இந்நடைமுறை வரும் வாரம் முதல் தமிழகத்தில் அமுல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இது தொடர்பாக பொது மக்களிடம் விழிப்புணர்வு இருப்பதால் புகார்கள் வருகின்றன, என்றார். பேட்டியின்போது மாவட்ட கலெக்டர் உமா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Updated On: 26 May 2023 2:15 AM GMT

Related News