நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

நாமக்கல்லில் நாளை திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்ள வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல் வருகை தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
X

நாமக்கல் வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, திளான பொதுமக்கள், ரோட்டோரம் வரிசையாக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல்லில் நாளை திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்துகொள்ள, நாமக்கல் வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 10 கி.மீ தூரம் பொதுமக்கள் கூடிநின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல் நகரில் திமுக உள்ளாட்சிப்பிரதிநிதிகள் மாநாடு நாளை 3ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, மாநகாட்சி, நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மேயர்கள், துணை மேயர்கள், தலைவர்கள், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றனர். அனைவருக்கும் மாநாட்டுப் பந்தலில் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டு முகப்பு சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தைப்போல் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுப் பந்தலின் முகப்பு கேட்டை வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநாட்டிற்கு தலைமை வகித்து துவக்கி வைக்கிறார். அமைச்சர்கள் மற்றும் திமுக பேச்சாளர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சித்துறை அமைச்சர் நேரு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜ்சயபா எம்.பி ராஜேஷ்குமார் ஆகியோர் கடந்த 5 நாட்களாக மேடை அமைப்பு பணிகளை மேற்பார்வை செய்து ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இன்று 2ம் தேதி கரூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, தமிழக முதல்வர் ஸ்டாலின், நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு கார் மூலம் நாமக்கல் வந்தார். நாமக்கல் - கரூர் மாவட்ட எல்லையில் ப.வேலூர் காவிரி பாலம் அருகே நாமக்கல் மாவட்டகலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி சாய்சரன் தேஜஸ்வி, மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மூர்த்தி ஆகியோர் மலக்கூடை வழங்கி முதல்வரை வரவேற்றனர். நாமக்கல் அருகே கீரம்பூர் டோல் பிளாசா அருகில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி தலைமையில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், நகராட்சித்தலைவர் கலாநிதி ஆகியோர் மலர்க்கூடை வழங்கி முதல்வர் ஸ்டாலினை வரவேற்றார். நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோயில் சார்பில் பட்டாச்சாரியார்கள் முதல்வருக்கு மரியாதை அளித்து வரவேற்பு அளித்தனர்.

கீரம்பூரில் இருந்து நாமக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள சுற்றுலா மாளிகை வரை, ரோட்டின் இருபுறங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு முதலமைச்சரை வரவேற்றனர். ரோடு ஓரம் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால், முதலமைச்சர் வாகனத்தில் மெதுவாகச் சென்று அவர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார். இதனால் முதல்வரின் கான்வாய் அணிவிப்பு மிகவும் மெதுவாக நகர்ந்து சென்றது. அப்போது தாரை தப்பட்டை, குறவன் குறத்தி ஆட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்வற்றுடன் பொதுமக்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நாமக்கல் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுத்து வரும் முதல்வர் ஸ்டாலின் நாளை 3ம் தேதி காலை 9.30 மணிக்கு பொம்மைக்குட்டை மேட்டில் அமைக்கப்பட்டுள்ள திடலுக்கு வருகை தந்து மாநாட்டை துவக்கி வைத்துப் பேசுகிறார். தமிழக முதல்வரின் நாமக்கல் வருகையை முன்னிட்டு நாமக்கல் பகுதி மூலம் 4,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 2 July 2022 10:45 AM GMT

Related News

Latest News

 1. சினிமா
  தேசிய விருதை கிண்டலடித்தாரா பார்த்திபன்...?
 2. குமாரபாளையம்
  பயிற்சி முடிந்து திரும்பிய குமாரபாளையம் என்.சி.சி. அலுவலருக்கு...
 3. குமாரபாளையம்
  மகன்களால் கைவிடப்பட்ட 81 வயது மூதாட்டி குமாரபாளையம் போலீசில் புகார்
 4. குமாரபாளையம்
  மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய், இரண்டாவது கணவர் போக்சோவில்...
 5. டாக்டர் சார்
  livogen Z tablet uses in tamil ரத்த சோகை நோய்க்கான லிவோஜன் Z...
 6. புதுக்கோட்டை
  விஸ்வரூபம் எடுத்துள்ள புதுக்கோட்டை நகரின் அரசு உயர் துவக்கப்பள்ளி...
 7. குமாரபாளையம்
  குமாரபாளையத்தில் கொங்கு பவர் லூம்ஸ் உரிமையாளர்கள் சங்க பொன்விழா
 8. கோவை மாநகர்
  கோவையில், மாணவர் துாக்கிட்டு தற்கொலை
 9. ஆரணி
  திருவண்ணாமலையில் இயற்கை விவசாயிகள் ஆலோசனை கூட்டம்
 10. கலசப்பாக்கம்
  திருவண்ணாமலை: மிருகண்டா அணையில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு