நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

நாமக்கல்லில் தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
நாமக்கல்லில் தமிழக முதல்வர் வருகை: மேடை அமைப்பு பணிகளை அமைச்சர்கள் ஆய்வு
X

நாமக்கல் அருகே பொம்மைக்குட்டை மேட்டில், தமிழக முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான மேடை அமைக்கும் பணிகளை அமைச்சர்கள் வேலு, நேரு, மதிவேந்தன் ஆகியோர் பார்வையிட்டனர். அருகில் ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் ராமலிங்கம், பொன்னுசாமி ஆகியோர்.

நாமக்கல்லில் ஜூலை 3ம் தேதி தமிழக முதல்வர் கலந்து கொள்ளும், மாநாட்டு பந்தல் மற்றும் மேடையை 3 அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பயிற்சி கருத்தரங்கம், வருகிற ஜூலை 3ம் தேதி, நாமக்கல் அருகே உள்ள பொம்மைக்குட்டை மேட்டில் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகிறார். இதற்கான அரங்கம் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வருகிறது. இன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் துறை அமைச்சர் நேரு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர், விழா நிகழ்விடத்திற்கு வந்தனர். அரங்கம் மற்றும் மேடை அமைப்பு பணிகளை அவர்கள் பார்வையிட்டு ஆலேசனை வழங்கினார்கள்.

ராஜ்சயபா எம்.பியும், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான ராஜேஷ்குமார், எம்எல்ஏக்கள் நாமக்கல் ராமலிங்கம், சேந்தமங்கலம் பொன்னுசாமி, நகராட்சித் தலைவர் கலாநிதி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Updated On: 25 Jun 2022 10:15 AM GMT

Related News