ஜூலை 3 -ல் நாமக்கல்லுக்கு தமிழக முதல்வர் வருகை: ராஜேஷ்குமார் எம்.பி தகவல்

CM Visit Today - ஜூலை 3 -ல் நாமக்கல்லுக்கு தமிழக முதல்வர் வருகை

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
ஜூலை 3 -ல் நாமக்கல்லுக்கு தமிழக முதல்வர் வருகை: ராஜேஷ்குமார் எம்.பி தகவல்
X

நாமக்கல் கிழக்கு நகர திமுக சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி பேசினார். அருகில் எம்எல்ஏ ராமலிங்கம்.

CM Visit Today - நாமக்கல்லுக்கு ஜூலை 3ல் வருகை தரும் தமிழக முதல்வருக்கு 13 கி.மீ நீளத்துக்கு சுமார் 1 லட்சம் பேர் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ராஜேஷ்குமார் எம்.பி தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக அளவில் திமுக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு வருகிற ஜூலை 3 ம்தேதி, நாமக்கல் அருகில் உள்ள பொம்மைக்குட்டைமேட்டில் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்று முதல்முறையாக நாமக்கல்லுக்கு வருகைதரும் அவருக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம், கிழக்கு மாவட்டம் முழுவதும் நகர, ஒன்றிய வாரியாக நடைபெற்று வருகிறது.

நாமக்கல் கிழக்கு நகர திமுக சார்பில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர பொருப்பாளரும், நகராட்சி வைஸ் சேர்மனுமான பூபதி தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். மாவட்ட திமுக பொறுப்பாளர் ராஜேஷ்குமார் எம்.பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசியதாவது: தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட 9 ஆயிரம் பேரும், கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட 2 பேரும், வெற்றிபெற்று நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் உள்ளனர்.

இவர்களுக்கான சிறப்பு பயிற்சி கருத்தரங்கம், நாமக்கல்லில் வருகிற 3ம் தேதி நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தை நடத்திட, தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைச்சர்களும் வாய்ப்பு கேட்டனர். அதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் உள்ளாட்சி தேர்தலில் 97 சதவீதம் திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்ற நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு, இந்த கருத்தரங்கை நடத்திட வாய்ப்பு அளித்துள்ளார்.

கரூரில் ஜூலை 2ம் தேதி நடைபெறும் அரசு விழாவை முடித்துக்கொண்டு, அன்று மாலை முதல்வர் ஸ்டாலின் கார் மூலம் நாமக்கல் வருகிறார். நாமக்கல் கிழக்கு மாவட்ட எல்லையான கீரம்பூரில் இருந்து கலெக்டர் ஆபீஸ் அருகில் உள்ள ஆய்வு மாளிகை அவரை, அவருக்கு கிழக்கு மாவட்ட திமுக சார்பில் இதுவரை தமிழகம் கண்டிராத வகையில் மிகச்சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மொத்தம் 13 கி.மீ தூரம் ரோட்டின் இருபுறங்களிலும் திமுகவினரும், திரளான பொதுமக்களும் நின்று முதல்வரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நகர, ஒன்றிய, டவுன் பஞ்சாயத்து திமுக நிர்வாகிகளுக்கு குறிப்பிட்ட தூரம் வரை இடம் ஒதுக்கப்படும். அவர்கள் அனைவரும் திமுகவினரையும், பொதுமக்களையும் சிறிய வாகனங்களில் அழைத்து வந்து, ஒதுக்கப்பட்ட இடத்தில் நின்று, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் முதல்வரை வரவேற்க வேண்டும். மேளதாளங்கள், பலூன்கள், வரவேற்பு வளைவுகள், கட்சிக்கொடி தோரனங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை வழி நெடுகிலும் அமைத்து முதல்வரை சிறப்பாக வரவேற்க வேண்டும்.

உள்ளாட்சி கருத்தரங்கம் நடைபெறும் இடத்தில், ஏற்கனவே பாஸ் வழங்கப்பட்டுள்ள உள்ளாட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எனவே திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் முதல்வர் வரும் வழியில் ரோட்டின் இருபக்கமும், கட்டுக்கோப்புடன் நின்று தங்களின் வரவேற்பை அளிக்க வேண்டும். ஏற்கனவே இருந்த அரசு நாமக்கல் மாவட்டத்திற்கு 10 ஆண்டுகளாக செய்யாத பல திட்டங்களை கடந்த ஒரு ஆண்டில் நமது திமுக அரசு செய்துள்ளது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அனைவரும் முதல்வருக்கு வழங்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

நாமக்கல் நகராட்சி சேர்மன் கலாநிதி, திமுக மாநில நிர்வாகிகள் மணிமாறன், ராணி, முன்னாள் எம்.பி சுந்தரம், முன்னாள் மாவட்ட செயலாளர் வக்கீல் இளங்கோ, முன்னாள் நராட்சி சேர்மன் கரிகலான், பொதுக்குழு உறுப்பினர் கண்ணன், சென்னிமலை உள்ளிட்டோர்

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 2022-06-23T17:07:21+05:30

Related News

Latest News

 1. விழுப்புரம்
  பெண் ஐபிஎஸ் பாலியல் வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒத்திவைப்பு
 2. திருமங்கலம்
  கொடுக்கல் வாங்கல் வழக்கு நீதிபதிகள் முன்பு முடித்து வைப்பு
 3. தமிழ்நாடு
  வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு
 4. இலால்குடி
  திருச்சியில் திருநாவுக்கரசர் எம்.பி. தலைமையில் காங்கிரசார் போராட்டம்
 5. திருச்சிராப்பள்ளி மாநகர்
  திருச்சி அருகே அரசு பஸ் மீது லாரி மோதிய விபத்தில் ஓட்டுனர் பலி
 6. வந்தவாசி
  வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம்: போலீஸ் விசாரணை
 7. உலகம்
  பிரதமர் மோடியை தேடி வந்து நட்பு பாராட்டிய அமெரிக்க அதிபர்..!
 8. ஆரணி
  கண்ணமங்கலம் அருகே புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்
 9. நாமக்கல்
  நாமக்கல் அருகே கிணற்றில் தவறி விழுந்த கன்றுக் குட்டி உயிருடன் மீட்பு
 10. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் காவல் தெய்வங்கள் இடமாற்றம்