காதலியை கழுத்து நெரித்துக் கொலை செய்த சட்டீஸ்கர் மாநில சிறுவன் கைது

நாமக்கல் அருகே காதலியை கழுத்து நெரித்துக் கொலை செய்த சட்டீஸ்கர் மாநில சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
காதலியை கழுத்து நெரித்துக் கொலை செய்த சட்டீஸ்கர் மாநில சிறுவன் கைது
X

நாமக்கல் மாவட்டம், மோகனூர் அடுத்த நொச்சிப்பட்டியில், தனியார் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு, சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பலர் வேலை செய்து வருகின்றனர். அங்கு வேலை செய்து வரும் தனது நண்பரிடம் வேலை கேட்டு, சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சோமனுபோயன் (17) என்பவர் தனது காதலி 16வயது சிறுமியுடன் வந்தார். நண்பர், கோழிப்பண்ணை உரிமையாளரிடம் அழைத்துச் சென்று வேலை கேட்டுள்ளார். அதற்கு குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை எனக்கூறி, கோழிப்பண்ணை உரிமையாளர் இருவரையும் திருப்பி அனுப்பிவிட்டார்.

இதற்கிடையில், இன்று காலை 8 மணிக்கு, சோமனுபோயன், வேறொரு பெண்ணுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருப்பதை, அவரது காதலி பார்த்துள்ளார். அதனால், அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஆத்திரம் அடைந்த சோமனுபோயன், தனது காதலி போதிமாண்டவியின் கழுத்தில், துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்தார். தகவல் அறிந்த மோகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, காதலியை கொலை செய்த சோமனுபோயனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 18 May 2022 1:00 PM GMT

Related News

Latest News

 1. விழுப்புரம்
  விழுப்புரத்தில் மின் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
 2. தேனி
  கம்பத்தில் டூவீலர் நிலை தடுமாறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு
 3. இந்தியா
  உதய்பூர் கொலைகாரனுக்கும் பா.ஜ.கவுக்கும் தொடர்பு இல்லை: ஐ.டி. பிரிவு...
 4. தேனி
  தேனி என்.எஸ்., கல்லுாரியில் 'கல்லுாரி கனவு' திட்ட முகாம்
 5. பாளையங்கோட்டை
  பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் 96வது பட்டமளிப்பு விழா
 6. ஈரோடு
  ஈரோடு மாவட்டத்தில் கடந்த 26 நாட்களில் மட்டும் 204 பேருக்கு கொரோனா...
 7. தேனி
  ஆண்டிபட்டியில் டூவீலர் மீது அரசு பஸ் மோதி விபத்து: விவசாயி பலி
 8. தேனி
  கஞ்சா விற்ற இரு வியாபாரிகள் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைது
 9. அரியலூர்
  குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டத்தினை மாவட்ட கலெக்டர் துவக்கி வைப்பு
 10. அரியலூர்
  அரியலூர் மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு