/* */

என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு

என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு எதிரொலியாக, வீட்டிற்கு வெளியே படுத்து உறங்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

HIGHLIGHTS

என்.புதுப்பட்டி பகுதியில் தொடர் செயின் பறிப்பு
X

நாமக்கல் மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வருவதால், பல இடங்களில், பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டுக்கு வெளியே படுத்து தூங்குகின்றனர். நாமக்கல்லை அடுத்த என்.புதுப்பட்டி கிராமத்தில் இரவு நேரத்தில் வீட்டிற்கு வெளியே படுத்து தூங்கும் பெண்களை குறிவைத்து, கொள்ளையர்கள் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, பொதுமக்கள் இரவு நேரங்களில் வீடுகளுக்கு வெளியே படுத்து உறங்க வேண்டாம் என போலீசார் வீதிவீதியாக சென்று ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

பெண்களிடம் இருந்து, தங்க செயினை பறித்து கொண்டு ஓடும் கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். இதனிடையே இரவு நேரங்களில் பொதுமக்கள் யாரும் வீடுகளுக்கு வெளியே படுத்து உறங்க வேண்டாம் எனவும், பாதுகாப்புடன் இருக்குமாறும் போலீசார் அந்த கிராம பகுதிகளில் வாகனங்களில் சென்று ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Updated On: 8 May 2022 4:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 32 கன அடியாக அதிகரிப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    மனித நுண்ணறிவின் வகைகள்: தெரிந்துகொள்ளுங்கள்
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 22 கன அடியாக அதிகரிப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் தொகுதியில் 68.26 சதவிகித வாக்குகள் பதிவு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  8. ஈரோடு
    மகாவீர் ஜெயந்தி: ஈரோடு மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடல்
  9. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  10. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...