/* */

தமிழகம் வரும் மத்திய அமைச்சர்கள் தொழில்துறையை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்: கொமதேக கோரிக்கை

MLA News -இந்திய வர்த்தகம், தொழில் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், எந்த நம்பிக்கையையும் கொடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது

HIGHLIGHTS

MLA News | Namakkal News Today
X

MLA News -தமிழகத்திற்கு வருகை தரும் மத்திய அமைச்சர்கள் தொழில்துறையை மேம்படுத்த முயற்சி எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து கொமதோக பொதுச்செயலாளரும், திருச்செங்கோடு எம்எல்ஏவுமான ஈ.ஆர். ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் பொருட்கள் ஏற்றுமதி மிகவும் சரிந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி ஆகின்ற ஜவுளி பொருட்களின் அளவு வரலாறு காணாத அளவில் குறைந்திருக்கிறது. அடிக்கடி பஞ்சு விலை ஏற்றமும், மத்திய அரசின் ஏற்றுமதியாளர்களுக்கு அனுசரணை இல்லாத ஏற்றுமதி கொள்கையும், இதற்கு முக்கிய காரணங்களாக விளங்குகிறது.

வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்ற பொருட்களை கப்பலில் அனுப்பும் பொழுது பயண நேரம் கட்டுக்குள் இல்லாமல் இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் தென் மாநிலங்களில் இருந்து நேரடியாக அமெரிக்காவிற்கு பொருட்களை அனுப்பக்கூடிய வசதியான துறைமுகங்கள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருட்களை, இலங்கையின், கொழும்பு துறைமுகத்தையோ அல்லது சிங்கப்பூர் துறைமுகத்தையோ நம்பித்தான் நாம் ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ரஷ்யா, உக்ரைன் போர் நடவடிக்கைகள் நம்முடைய ஏற்றுமதிக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதை குறைத்துக் கொண்டு அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய முன் வந்தாலும், அதற்கான சாத்தியக்கூறுகள் இன்னும் அமையவில்லை. அந்த வாய்ப்புகளை பயன்படுத்த மத்திய அரசு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிப்பதால், அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியும் இந்தியாவுக்கு பயனுள்ளதாக இல்லை.

இங்கிலாந்தின் பவுண்ட் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் யூரோ போன்றவை இந்திய ரூபாய்க்கு எதிராக சரிந்து நிலையில்லாமல் இருக்கிறது. இவை போன்ற காரணிகளும் இந்திய ஏற்றுமதிக்கு எதிராக உள்ளது. இந்தியாவினுடைய ஏற்றுமதி வர்த்தகமும், ஜவுளி துறையும் எப்போதும் இல்லாத அளவிற்கு சிக்கல்களில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் போது இந்திய வர்த்தகம், தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல், எந்த நம்பிக்கையையும் கொடுக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.

சமீபத்தில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், நலிந்து கொண்டிருக்கின்ற தமிழகத்தினுடைய தொழில்துறையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பேசுவார் என நம்பிக்கொண்டிருந்தோம். ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் பேசாமல் தமிழகத்தினுடைய ரேசன் கடைகள் குறித்து குறைகூறி பேசுகிறார். எதிர்பார்ப்போடு காத்திருந்த தமிழகத்தினுடைய சிறு, குறு தொழில் துறைகளுக்கு அவருடைய பேச்சுகள் ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

இந்திய நாட்டின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், தொழில்துறையினுடைய பிரச்னைகளை பேசி தீர்வு காணாமல் அரசியல் மட்டும் பேசி இருப்பது மேலும் தொழில் துறையைøச் சார்ந்தவர்களுக்கு வேதனையை கூட்டி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இன்னும் தமிழகத்திற்கு 50 மத்திய அமைச்சர்கள் வர இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். இனிவரும் அமைச்சர்களாவது அவரவர் துறை சார்ந்த பிரச்னைகளை அறிந்து அவற்றை தீர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும் என்று கொமதேக பொதுச்செயலர் ஈ.ஆர், ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 19 Oct 2022 4:06 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. நாமக்கல்
    தமிழகத்தில் தொடர்ந்து உயரும் வெப்பம்: 8,781 பேர் ஆம்புலன்ஸ் மூலம்...
  3. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் ஓட்டுப்பதிவு துவக்கம்: வாக்காளர்கள் ஆர்வத்துடன்...
  4. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  6. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  7. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  8. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  9. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய