/* */

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல்

நாமக்கல் மாவட்டத்தில் காலியாக உள்ள 16 உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் 9ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் வரும் 9ம் தேதி உள்ளாட்சிப் பதவிகளுக்கு இடைத்தேர்தல்
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 30.4.2022 வரை காலியாக உள்ள, 16 பதவிகளுக்கு வரும் 9ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. 39 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இது குறித்து நாமககல் கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டம், பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்து 8வது வார்டு உறுப்பினர், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியக் குழு 4வது வார்டு உறுப்பினர், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆயில்பட்டி பஞ்சாயத்து தலைவர், எலச்சிபாளையம் ஊராட்சி ஒன்றியம் இளநகர் பஞ்சாயத்து 2 வது வார்டு உறுப்பினர், மற்றும் மாவுரெட்டிபட்டி பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர், எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் வடவத்தூர் பஞ்சாயத்து 2வது வார்டு உறுப்பினர், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம் சிறுநல்லிக்கோயில் பஞ்சாயத்து 3வது வார்டு உறுப்பினர், மோகனூர் ஊராட்சி ஒன்றியம் ராசிபாளையம் பஞ்சாயத்து 9வது வார்டு உறுப்பினர், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் மத்துருட்டு பஞ்சாயத்து 5வது வார்டு உறுப்பினர், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் ஓடப்பள்ளி அக்ரஹாரம் பஞ்சாயத்து 3வது வார்டு உறுப்பினர் மற்றும் தட்டாங்குட்டை பஞ்சாயத்து 11வது வார்டு உறுப்பினர், பரமத்தி

ஊராட்சி ஒன்றியம் செருக்கலை பஞ்சாயத்து 9வது வார்டு உறுப்பினர், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கதிராநல்லூர்; பஞ்சாயத்து 1வது வார்டு உறுப்பினர், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் மோளப்பாளையம் பஞ்சாயத்து 8வது வார்டு உறுப்பினர், சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டி பஞ்சாயத்து 8வது வார்டு உறுப்பினர், திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் சிறுமொளசி பஞ்சாயத்து 4வது வார்டு உறுப்பினர் உள்ளிட்ட 16 காலிப் பதவிளுக்கான இடைத்தேர் தேர்தலில் வருகிற 9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும்.

காலி பதவிளுக்கான வேட்பு மனுக்கள் கடந்த 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெற்றது. கபிலர்மலை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு 8 வேட்பு மனுக்களும், ஆயில்பட்டி கிராம பஞ்சாயத்து தலைவருக்கு 4 வேட்பு மனுக்களும், கிராம ஊராட்சி வார்டுகளில் வடவத்தூரில் 2 வேட்பு மனுக்களும், ராசிபாளையத்தில் 4 வேட்பு மனுக்களும், மத்துருட்டு கிராமத்தில் 2 வேட்பு மனுக்களும், ஓடப்பள்ளி அக்ரஹாரம் 2 வேட்பு மனுக்களும், தட்டான்குட்டை 2 வேட்பு மனுக்களும், கதிராநல்லூரில் 3 வேட்பு மனுக்களும், மோளப்பாளையத்தில் 2 வேட்பு மனுக்களும், கொண்டமநாயக்கன்பட்டியில் 2 வேட்பு மனுக்களும் மற்றும் பிள்ளாநல்லூர் டவுன் பஞ்சாயத்தில் 3 வேட்பு மனுக்களும் பெறப்பட்டு இறுதியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் இளநகர், மாவுரெட்டிப்பட்டி, சிறுநல்லிக்கோயில், செருக்கலை மற்றும் சிறுமொளசி ஆகிய வார்டு உறுப்பினர்களுக்கு தலா ஒரு வேட்புமனு மட்டும் வரப்பெற்றுள்ளது. இவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தல் தொடர்பான புகார்கள் இருப்பின் வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 04286 - 280534 மூலம் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம்.

Updated On: 1 July 2022 1:45 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    ஹாட்ஸ்பாட் படம் எப்படி இருக்கு?
  2. அவினாசி
    கருவலூா் மாரியம்மன் கோவில் தேரோட்டம்; பக்தா்கள் பரவசம்
  3. திருப்பூர்
    ஆசிரியா்களுக்கு அவா்கள் வசிக்கும் பகுதிகளில் தோ்தல் பணி வழங்க ...
  4. திருப்பூர்
    ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்
  5. திருப்பூர்
    திருப்பூா் மக்களவைத் தொகுதிக்கு தோ்தல் பாா்வையாளா்கள் நியமனம்
  6. அரசியல்
    பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண்நேரு பிரச்சாரம் நாளை எங்கு?
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் வெப்பநிலை உயர்வால் ஆபத்து: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
  8. சினிமா
    கா படம் எப்படி இருக்கு?
  9. மதுரை
    ஐந்து ஆண்டுகளில் 10 மடங்கு உயர்ந்த மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனின்...
  10. சிதம்பரம்
    குண்டுமணி தங்கம் கிடையாதாம்: திருமாவளவன் பிரமாண பத்திரத்தில் தகவல்