/* */

நாமக்கல்லில் மாநில ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள்: நாளை துவக்கம்

நாமக்கல் நகரில் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிகள் நாளை துவங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் மாநில ஆண்கள், பெண்கள் கூடைப்பந்து போட்டிகள்: நாளை துவக்கம்
X

நாமக்கல்லில் நடைபெற்ற, மாநில கூடைப்பந்து போட்டிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில், கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன் பேசினார்.

நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் திருச்செங்கோடு, பிஆர்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், 23வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் துவக்க விழா நாளை பிப். 1ம் தேதி துவங்கி 5ம் தேதி வரை, நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டிகள் பகல் நேரத்திலும், இரவு மின்னொளியிடும் நடைபெறும். தமிழக கூடைப்பந்து கழக ஒப்புதலுடன் போட்டிகள் நடைபெறும். தொடக்க ஆட்டம் நாக் அவுட் முறையிலும், பின்னர் லீக் முறையிலும் போட்டிகள் நடைபெறும். தமிழகத்தின் பிரபல அணிகள் கல்நதுகொள்ளும் இந்தப் போட்டியில், ஆண்கள் கூடைப்பந்து பிரிவில் 24 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் என மொத்தம் 36 அணிகள் கலந்துகொள்கின்றனர். சுமார் 600 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்று விளையாட உள்ளனர்.

இன்று பிப்.1ம் தேதி, மாலை 6 மணிக்கு, நடைபெறும் துவக்க விழாவிற்கு, திருச்செங்கோடு பிஆர்டி குரூப்ஸ் சேர்மன் பரந்தாமன், மாநில கூடைப்பந்து கழக செயலாளர் அஜீஸ் அகமத் ஆகியோர் தலைமை ஏற்கின்றனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங், எஸ்.பி கலைச்செல்வன் ஆகியோர் போட்டிகளை துவக்கி வைக்கின்றனர். சிஇஓ மகேஸ்வரி, டிஇஓ ரவி, நகராட்சி கமிஷனர் சுதா, தலைமை ஆசிரியர் பெரியண்ணன், மாவட்ட விளையாட்டு அலவலர் சிவரஞ்சன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். தொடர்ந்து 5ம் தேதி வரை பகல் மற்றும் இரவு நேரங்களில் ஆண்கள் மற்றும் பெண் கூடைப்பந்து போட்டிகள் நடைபெறும்.

வருகிற 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறும். தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவர் ஆதவ் அர்ஜூன், நாமக்கல் மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன் ஆகியோர் தலைமை வகிக்கின்றனர். வனத்துறை அமைச்சர் மதிவேந்நதன், ராஜ்யசபா எம்.பி ராஜேஷ்குமார், நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம், சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுராசெந்தில், மாநில திமுக மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராணி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கிப் பேசுகிறார்கள். முடிவில் கூடைப்பந்து கழக செயலாளர் முரளி நன்றி கூறுகிறார். போட்டிகளில் வெற்றிபெற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு தனித்தனியாக முதல் பரிசு ரூ. 60 ஆயிரம், 2ம் பரிசு ரூ. 50 ஆயிரம், 3ம் பரிசு ரூ.40 ஆயிரம், 4ம் பரிசு ரூ.30 ஆயிரம் மற்றும் சிறந்த ஆட்டக்காரருக்கான பரிசு ரூ.5 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

போட்டிக்கான ஏற்பாடுகளை நாமக்கல் கூடைப்பந்து கழக தலைவர் நடராஜன், திருச்செங்கோடு பிஆர்டி ஸ்போர்ட்ஸ் கிளப் சேர்மன் பரந்தாமன், கூடைப்பந்து கழக சேர்மன் பாண்டியராஜன், செயலாளர் முரளி, துணைத்தலைவர் கணேஷ் தேவராஜ், நிர்வாகிகள் முருகேசன், நல்லதம்பி, சதீஷ், சுரேஷ், பயிற்சியாளர் ஜெயபால், ராமகிருஷ்ணன், ஏபிசி ரவி மற்றும் குழுவினர் செய்துள்ளனர்.

Updated On: 31 Jan 2023 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  2. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  3. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  5. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  6. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி
  7. கல்வி
    அறிவை விளைவிக்கும் எழுத்து வயல், புத்தகங்கள்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு மருத்துவ பரிசோதனை ஏன் அவசியம்..?
  9. சினிமா
    கில்லி படத்துல அது ஃபேக்காம்.. தரணியே சொல்லிட்டாரு..!
  10. ஈரோடு
    ஈரோட்டில் நிழல் சண்டை செயல் முறையில் அசத்திய கராத்தே வீரர்,...