/* */

அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என்பது தெரியுமா?

அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது.

HIGHLIGHTS

அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள்  விடுமுறை என்பது தெரியுமா?
X

பைல் படம்.

அக்டோபர் மாதம் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை நாட்களாக ரிசர்வ் வங்கி அறிவித்து, அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

பொதுமக்கள், வியாபரிகள் மற்றும் பல்வேறு வர்த்தக நிறுவனங்களுக்கும், தினசரி பணம் செலுத்துவது, எடுப்பது, கடன் பெறுவது என, பல்வேறு நிதித் தேவைகளுக்காக வங்கி சேவை முக்கியமானதாக உள்ளது. வழக்கமாக வங்கிகளுக்கு, இரண்டாவது மற்றும் நான்காவது சனி, ஞாயிற்றுக்கிழமை மற்றும் தேசிய, மாநில விடுமுறைகள், உள்ளூர் விடுமுறைகள் என, பல விடுமுறை நாட்கள் உள்ளன.

ஒவ்வொரு மாதத்தின் முடிவின் போதும், அடுத்த மாதத்துக்கான விடுமுறை பட்டியலை, ரிசர்வ் பேங்க் வெளியிட்டு வருகிறது. இதையொட்டி, வாடிக்கையாளர்கள் வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வங்கிக் கிளைகளில் பணத்தை எடுத்தல், டெபாஸிட் செய்தல் போன்ற நிதி சேவைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்து வருகின்றனர்.

இதன்படி, செப்டம்பர் மாதம் முடிந்து, அக்டோபர் மாதத்திற்கான விடுமுறைப் பட்டியலில், வங்கிகளுக்கான, பொது விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் விடுமுறை எனக்கணக்கிட்டு, விடுமுறை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி, நவராத்திரி, ஆயுத பூஜை, விஜயதசமி, தீபாவளி என வேறு எந்த மாதத்திலும் இல்லாத அளவுக்கு, அக்டோபரில் 21 நாட்கள் வங்கிக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

அக்பேடார் 1ல், வங்கி கணக்குகளின் அரையாண்டு நிறைவு, 2ம் தேதி காந்தி ஜெயந்தி மற்றும் ஞாயிறு விடுமுறை, 3ம் தேதி துர்கா பூஜை (அகர்தலா, புவனேஸ்வர், கவுகாத்தி, இம்பால், கொல்கத்தா, பாட்னா மற்றும் ராஞ்சி).

அக். 4ம் தேதி, சிறீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை, தசரா, ஆயுத பூஜை, ஜன்மோத்சவ் (அகர்தலா, பெங்களூர், புவனேஸ்வர், சென்னை, காங்டாக், கவுஹாத்தி, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, பாட்னா, ராஞ்சி, ஷில்லாங் மற்றும் திருவனந்தபுரம்)

அக். 5ம் தேதி, சிறீமந்த சங்கரதேவரின் துர்கா பூஜை, தசரா, ஜன்மோத்சவ், 6ம் தேதி துர்கா பூஜை (காங்டாக்), 7ம் தேதி துர்கா பூஜை (காங்டாக்), 8ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை விடுமுறை மற்றும் மிலாடி நபி (முகமது நபி பிறந்த நாள்).

அக்டோபர் 9ம் தேதி ஞாயிறு விடுமுறை, 13ம் தேதி கர்வா சவுத் (சிம்லா), 14ம் தேதி ஈத்-இ-மிலாத்-உல்-நபி (ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்), 16ம் தேதி ஞாயிறு விடுமுறை, 18ம் ÷தி கதி பிஹு (கவுகாத்தி), 22ம் தேதி, நான்காவது சனிக்கிழமை, 23ம் தேதி ஞாயிறு விடுமுறை.

அக்டோபர் 24ம் தேதி- காளி பூஜை, தீபாவளி பண்டிகை, 25ம் தேதி லட்சுமி பூஜை, தீபாவளி, கோவர்தன் பூஜை (காங்டாக், அய்தராபாத், இம்பால் மற்றும் ஜெய்ப்பூர்), 26ல், கோவர்தன் பூஜை, பாய் துஜ், தீபாவளி, விக்ரம் சம்வந்த் புத்தாண்டு தினம் (அகமதாபாத், பேலாபூர், பெங்களூர், டேராடூன், காங்டாக், ஜம்மு, கான்பூர், லக்னோ, மும்பை, நாக்பூர், சிம்லா மற்றும் ஸ்ரீநகர்)

அக்டோபர் 27ம் தேதி, பாய் துரஜ், லட்சுமி பூஜை, தீபாவளி (காங்டாக், இம்பால், கான்பூர் மற்றும் லக்னோ) 30ம் தேதி ஞாயிறு, 31ம் தேதி சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள், சூர்ய பஷ்டி தலா சாத், சத் பூஜை (அகமதாபாத், பாட்னா மற்றும் ராஞ்சி).

Updated On: 5 Oct 2022 4:30 AM GMT

Related News