/* */

ஓய்வூதியர்கள் போஸ்ட்மேன் மூலம் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க ஏற்பாடு

Pension News Today - நாமக்கல் மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் போஸ்ட்மேன் மூலம் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

ஓய்வூதியர்கள் போஸ்ட்மேன் மூலம் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்க ஏற்பாடு
X

பைல் படம்

Pension News Today - நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், வரும் ஜூலை 1 முதல், செப். 30 வரை அவர்களது வீட்டு வாசலிலேயே டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை, போஸ்ட்மேன்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசுக்கும், இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் பேங்கிற்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, 2 ஆண்டுகளாக உயிர்வாழ் சான்றிதழ் சமர்பிப்பதில் இருந்து, மாநில அரசு விலக்கு அளித்துள்ளது. இந்த ஆண்டு 7 லட்சத்து, 15 ஆயிரத்து, 761 மாநில அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர், வரும் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், தங்கள் உயிர்வாழ் சான்றிதழைச் சமர்ப்பிக்கும் படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க, ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், ஜீவன் பிரமான் திட்டத்தின் மூலம், தபால் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் மூலம் ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே, பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி, டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது.

அதற்கு சேவை கட்டணமாக ரூ. 70 போஸ்ட் மேனிடம் செலுத்த வேண்டும். ஓய்வூதியதாரர்கள், தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண் மற்றும் ஓய்வூதிய கணக்கு விபரங்களை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். மாநில அரசு ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் இந்த வசதியைப் பயன்படுத்தி, வீட்டில் இருந்த படியே, தங்கள் பகுதி போஸ்ட் மேனிடேம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 29 Jun 2022 10:34 AM GMT

Related News