/* */

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகைபெற, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

HIGHLIGHTS

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு
X

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா.

நாமக்கல் மாவட்டத்தில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசின் சார்பில், மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மாதம் ஒன்றுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750 மற்றும் பட்டதாரிகளுக்கு ரூ.1000 வீதம் 10 ஆண்டுகளுக்கு உதவித்தொகை மாதம் தோறும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் தற்பொழுது 1.4.2023 முதல் 30.6.2023 வரையிலான காலாண்டிற்கு மேற்கண்ட கல்வித் தகுதிகளை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டு காலம் முடிவுற்ற பதிவுதாரார்களும், மேலும் இம்மையத்தில் பதிவு செய்து ஒரு வருடம் முடிவுற்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் தகுதியானவர்கள் ஆவார்கள். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், மற்றவர்கள் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.

மனுதாரர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. மனுதாரார் அரசு அல்லது தனியார் நிறுவனங்களின் மூலம் எந்தவித நிதி உதவித் தொகையும் பெறுபவராக இருத்தல் கூடாது. மேற்கண்ட தகுதியுடையவர்கள் உடனடியாக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்கள் மற்றும் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் சென்று விண்ணப்பத்தினைப் பெற்று, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Updated On: 6 Jun 2023 9:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் தேசிய பறவை மயிலை கொன்றால் எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை...
  2. இந்தியா
    இந்தியாவின் தேசிய விலங்கு புலிகள் ஊருக்குள் புகுவது ஏன்?
  3. கரூர்
    கரூர் எம்பி தொகுதியில் இதுவரை ரூ1.35 கோடி பணம் பரிசு பொருள் பறிமுதல்
  4. கோவை மாநகர்
    ஆரத்தி எடுத்த பெண்ணிற்கு பணம் கொடுத்தது குறித்து அண்ணாமலை விளக்கம்..!
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
  6. குமாரபாளையம்
    புனித வெள்ளியையொட்டி நடந்த சிலுவைப்பாதை..!
  7. லைஃப்ஸ்டைல்
    உளுந்துண்டு வாழ்ந்தால் வளம்காணும் உடலே..! எப்டீ? படீங்க..!
  8. நாமக்கல்
    தி.மு.க. அரசின் நலத்திட்டங்கள் பற்றி ராஜேஷ்குமார் எம்.பி. பேச்சு
  9. கோவை மாநகர்
    ஆரத்திக்கு அண்ணாமலை பணம் கொடுத்தாரா? விசாரணை நடத்த ஆட்சியர் உத்தரவு
  10. இந்தியா
    கங்கை நதி பற்றி இதுவரை தெரியாத உண்மைகள் இங்கே கட்டுரையாக...