/* */

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ஆலோசனை

மக்காச்சோளபயிரில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தி, மகசூல் இழப்பை தவிர்க்கலாம் என வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

HIGHLIGHTS

மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ஆலோசனை
X

பைல் படம்.

இதுகுறித்து நாமக்கல் வேளாண் உதவி இயக்குனர் அன்புசெல்வி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

மக்காசோளப் பயிரில் படைப்புழு தாக்குதல் தென்படுகிறது. படைப் புழுவின் தாக்குதலை, விவசாயிகள் ஆரம்பத்திலேயே கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால், மகசூல் பாதிப்பை தவிர்க்கலாம்.

படைப்புழுவினை கட்டுப்படுத்த, கடைசி உழவின் போது, ஏக்கருக்கு, 100 கிலோ வேப்பம் புண்ணாக்கு இட்டு உழவு செய்ய வேண்டும். விதைப்புக்கு முன் மக்காசோள விதைகளை, பெவேரியா பேசியானா என்ற பூஞ்சான கொல்லி மருந்தை, ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து, விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.

மக்காச்சோள வயலில் எள், சூரிய காந்தி, தட்டைப்பயறு, தீவனச்சோளம் போன்றவற்றை வரப்பு பயிராகவும், உளுந்து பாசிப்பயறு ஆகியவற்றை ஊடுபயிராகவும் சாகுபடி மேற்கொள்ள வேண்டும். விதைப்பு செய்த, 10 முதல், 15 நாட்களில், படைப்புழுவின் தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க ஏக்கருக்கு, 5 இன கவர்ச்சி பொறி அமைக்க வேண்டும். மக்காசோள பயிர் விதைப்பு செய்து, 15ல் இருந்து 20 நாட்களில், புழு இளம் பருவத்தில் தென்படும்போது வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்து அசாடிரக்டின் 1ஈசி மருந்தை, 10 லிட்டர் தண்ணீருக்கு 20 மில்லி வீதம் தெளித்து கட்டுத்தலாம்.

புழு வளர்ந்த நிலையில், பொருளாதார சேத நிலையை தாண்டும்போது, ரசாயன பூச்சி மருந்துகளில் ஏதாவது ஒன்றை தெளித்து கட்டுப்படுத்தலாம். ஸ்பைனிடோரம் 12 எஸ்.சி மருந்து ஏக்கருக்கு 100 மி., அல்லது குளோரன்ட்ரனிலிப்ரோல் 18.5 எஸ்.சி மருந்தை, ஏக்கருக்கு 80 மி. வீதம் தெளித்து கட்டுப்படுத்தலாம். மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண் முறையை கடைபிடித்து, படைப்புழுவின் தாக்குதலில் இருந்து மக்காச்சோளப் பயிரினை பாதுகாத்து மகசூல் இழப்பை தவிர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 22 Sep 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?