/* */

வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள்: எம்.பி உறுதி

Government School News - வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் மேஜை, நாற்காலிகள் வழங்குவதாக எம்.பி சின்ராஜ் உறுதியளித்தார்.

HIGHLIGHTS

வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள்: எம்.பி உறுதி
X

வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை, எம்.பி சின்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Government School News - நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, அடிப்படை வசதிகள் தேவை மற்றும் கூடுதல் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் தேவை என்று, பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் மற்றும் பொதுமக்கள் நாமக்கல் எம்.பி சின்ராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

இதன் அடிப்படையில் எம்.பி சின்ராஜ், வளையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் பள்ளியின் வளர்ச்சி குறித்து ஆசிரியர்களிடம் ஆலோசனை செய்தார். அப்போது அப் பள்ளிக்கு பார்லிமென்ட் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் அமைப்பதற்கும் மற்றும் மாணவ மாணவிகள் அமர்ந்து படிக்கும் வகையில் 75 ஜோடி மேசை, நாற்காலிகள் வழங்குவதாகவும் உறுதியளித்தார். நாமக்கல் தெற்கு மாவட்ட கொமதேக செயலாளர் மாதேஸ்வரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 28 Jun 2022 11:39 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?