/* */

75-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி

75-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

HIGHLIGHTS

75-வது சுதந்திர தின விழாவையொட்டி தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி
X

சுதந்திர தின அமுத பெருவிழாவையொட்டி நாமக்கல்லில் தபால் துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்தியாவின், 75வது சுதந்திர தினவிழா அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என்று பாரத பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதையொட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நாமக்கல் நகரில் தபால் துறையின் சார்பில் பேரணி நடைபெற்றது. நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். அனைத்து தபால்துறை ஊழியர்களும் தேசியக் கொடியை கையில் ஏந்தி இந்த பேரணியில் கலந்துகொண்டனர். நாமக்கல் தலைமை தபால் அலுவலகத்தில் தொடங்கிய பேரணி, மோகனூர் ரோடு, பரமத்தி ரோடு, ச.பே.புதூர், உழவர் சந்தை, பஸ் நிலையம், திருச்சி ரோடு வழியாக மீண்டும் தலைமை தபால் அலுவலகத்தை அடைந்தது.

இந்த பேரணியில் உதவி கண்காணிப்பாளர் அண்ணாமலை, அஞ்சல் ஆய்வாளர்கள் கோபிநாத், கார்த்திகேயன் அஞ்சலக ஆயுள் காப்பீடு வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், வணிக வளர்ச்சி அலவலர் சங்கர் உள்ளிட்ட திரளான தபால்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 9 Aug 2022 11:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    கேரளாவில் பறவைக்காய்ச்சல் உறுதி : நாமக்கல் கோழிப்பண்ணைகளில்...
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்பம் என்பது நம் வாழ்வில் முக்கிய அங்கம்: மேற்கோள்கள்..
  3. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகளின் சூப்பர் ஹீரோ தாத்தாக்களே..!
  4. நாமக்கல்
    சித்திரை மாத முதல் சனிக்கிழமை: ஆஞ்சநேயருக்கு சிறப்பு முத்தங்கி...
  5. நாமக்கல்
    தேர்தலில் அனைவரும் ஓட்டுப்போடுவதை கட்டாயமாக்க வேண்டும்: கொமதேக...
  6. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  7. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  8. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  9. இந்தியா
    ஸ்லோ டெத்... அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜெயிலில் இப்படி ஒரு கொடுமையா?
  10. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......