/* */

நாமக்கல் : 3 மணி நிலவரப்படி 64.19 சதவீதம் வாக்குப்பதிவு

நாமக்கல் மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 3 மணி நிலவரப்படி 64.19 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

HIGHLIGHTS

நாமக்கல் : 3 மணி நிலவரப்படி 64.19 சதவீதம் வாக்குப்பதிவு
X

பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடைபெறும் வாக்குப்பதிவை, தேர்தல் பார்வையாளர் இன்னசென்ட் திவ்யா, கலெக்டர் ஸ்ரேயாசிங் ஆகியோர் வெப் ஸ்ட்ரீமிங் முறையில் கண்காணித்தனர் ஆன்லைனில் கண்காணித்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள் மற்றும் 19 பேரூராட்சிகளில் உள்ள 439 வார்டுகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கியது. அதிகாலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.

மொத்தம் உள்ள 439 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 1748 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தம் 5 லட்சத்து 57 ஆயிரத்து 251 பேர் வாக்களிக்க உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 5 நகராட்சிப்பகுதிகளில் 365 ஓட்டுச்சாவடிகளும், 19 பேரூராட்சி பகுதிகளில் 324 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 689 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாலை 3 மணி நிலவரப்படி 5 நகராட்சிகளில் மொத்தம் 1,01,163 பேர் (60.77 சதீவிதம்) வாக்களித்துள்ளனர். 19 பேரூராட்சிகளில் மொத்தம் 1,57,732 பேர் (68.65 சதவீதம்) வாக்களித்துள்ளனர்.

இதுவரை மொத்தம் உள்ள 5,50,884 வாக்காளர்களில், 3,53,616 பேர் வாக்களித்துள்ளனர். மாலை 3 மணி நிலவரப்படி மொத்தம் 64.19 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.

தொடர்ந்து விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாவட்டம் முழுவதும் பதட்டமான பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

Updated On: 19 Feb 2022 10:15 AM GMT

Related News