Begin typing your search above and press return to search.
நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,048 பேர் விண்ணப்பம்
நாமக்கல் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு 4,048 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர்.
HIGHLIGHTS

பைல் படம்.
தமிழக அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள இடங்களுக்கு, தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியர் 71, பட்டதாரி ஆசிரியர் 15, முதுகலை ஆசிரியர் 14, என சுமார் 100 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்காக, கடந்த, 3 நாட்களாக, நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய கல்வி மாவட்ட அலுவலகங்களில், ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தோரிடமும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றுவோரிடமும் பூர்த்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் முடிவடைந்துவிட்டது. மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு, 4ஆயிரத்து 48பேர் விண்ணப்பித்துள்ளனர்.