/* */

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 23ல் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி

Free Agriculture Training in India -நாமக்கல்லில் வரும் 23ம் தேதி, லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 23ல் வெள்ளாடு வளர்ப்பு பயிற்சி
X

பைல் படம்

Free Agriculture Training in India - நாமக்கல்லில் வரும் 23ம் தேதி, லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.

இது குறித்து, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தின் (கேவிகே) தலைவர் தலைவர் அழகுதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 23ம் தேதி காலை 9 மணிக்கு, லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், வெள்ளாடு வளர்ப்பின் முக்கியத்துவம், வெள்ளாடு இனங்கள் மற்றும் அவற்றை தேர்வு செய்யும் முறைகள், கொட்டகை அமைக்கும் முறைகள், சரிவிகித தீவனம் அளித்தல், பசுந்தீவனம், உலர் மற்றும் கலப்புத்தீவனம் தயாரிக்கும் முறைகள், தீவனம், இனப்பெருக்கம் மற்றும் நோய் தடுப்பு மேலாண், கால அட்டவணைக்கு ஏற்ப தடுப்பூசி அளிக்கும் முறைகள் குறித்து விளக்கமளிக்கப்படும்.

பயிற்சியில், விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள், வேளாண் அறிவியல் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தங்களது பெயரை முன்பதிவு செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 21 Jun 2022 10:35 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?