/* */

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் 22 டன் காய்கறி விற்பனை

Namakkal news, namakkal news today- நாமக்கல் உழவர் சந்தையில், இன்று ஒரே நாளில் ரூ. 8.18 லட்சம் மதிப்புள்ள, 22 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனையானது.

HIGHLIGHTS

நாமக்கல் உழவர் சந்தையில் ஒரே நாளில் 22 டன் காய்கறி விற்பனை
X

Namakkal news, namakkal news today - நாமக்கல் உழவர் சந்தையின் நுழைவுவாயில் (கோப்பு படம்).

Namakkal news, namakkal news today- நாமக்கல் - கோட்டை ரோட்டில் உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது. தினசரி காலை 5 மணி முதல் 10 மணி வரை இங்கு விற்பனை நடைபெறும். நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளை தோட்டங்களில் விளைவிக்கப்பட்ட காய்கறி மற்றும் பழங்களை, தினசரி இங்கு கொண்டு வந்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர். வழக்கமாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், இங்கு காய்கறி விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

தற்போது ஆவணி மாதத்தில், முகூர்த்த நாட்கள் அதிக அளவில் உள்ளதால், வழக்கமான நாட்களை விட காய்கறி விற்பனை அதிகரித்து வருகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை முகூர்த்த நாளை முன்னிட்டு, காய்கறி வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்றது. இன்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில், 162 விவசாயிகள், 18 ஆயிரத்து, 890 கிலோ காய்கறிகள், 3,110 கிலோ பழங்கள், 20 கிலோ பூக்கள் என மொத்தம் 22 ஆயிரத்து 20 கிலோ எடையுள்ள 56 வகையான விளைபொருட்களை விற்பனைக்கு கொண்டுவந்தனர். அவற்றை, 4,410 நுகர்வோர் வாங்கிச் சென்றனர். இதன் மூலம் நாமக்கல் உழவர் சந்தையில் இன்று ஒரே நாளில் ரூ. 8 லட்சத்து 18 ஆயிரத்து 690 மதிப்பில் காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனையானது.

Updated On: 10 Sep 2023 8:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு