/* */

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 21ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

நாமக்கல் மாவட்டத்தில், இன்று 21ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 21ம் கட்ட கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
X

நாமக்கல் மாவட்டத்தில், இன்று 21ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மொத்தம் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 14 லட்சத்து 64 ஆயிரத்து 300 தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை முதல் தவணை, 12 லட்சத்து 26 ஆயிரத்து 236 பேருக்கும், இரண்டாம் தவணை 8 லட்சத்து 56 ஆயிரத்து 549 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற 20 மெகா தடுப்பூசி முகாம்களில், 7 லட்சத்து 21 ஆயிரத்து 798 பேர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற்றனர்.

இன்று 21ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துக்கள், டவுன் பஞ்சாயத்துக்கள், மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள, 442 நிலையான முகாம், 30 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 472 முகாம்களில், காலை 9 முதல், மாலை 5 மணி வரை, கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

மொத்தம் 1 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை தடுப்பூசி போடாதவர்களும், முதல் தவணை தடுப்பூசி போட்டு இரண்டாம் தவணை போடாதவர்களும் அருகில் உள்ள முகாம்களுக்கு சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Updated On: 5 Feb 2022 1:15 AM GMT

Related News

Latest News

  1. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  2. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  3. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  4. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!
  5. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 74.29 சதவீதம் வாக்குப்பதிவு: மாநில...
  6. சுற்றுலா
    பெங்களூரின் பரபரப்பில் ஒரு பயணம்!
  7. வணிகம்
    சிறந்த லாபகரமான முதலீட்டுத் திட்டங்கள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    தேங்காய்ப்பாலில் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  9. தமிழ்நாடு
    வேட்பாளரின் வாழ்க்கை எவ்வளவு கடினமானது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    கிராம்பு எண்ணெய் பலன்களை தெரிஞ்சுக்கலாமா?