/* */

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட இ.கம்யூ. கட்சியினர் 150 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இ.கம்யூனிஸ்ட் கட்சியினர், 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட இ.கம்யூ. கட்சியினர் 150 பேர் கைது
X

கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல்லில் இ.கம்யூனிஸ்ட் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இ.கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மத்திய அரசின் மின்சார திருத்த மசோதாவை கைவிடக்கோரியும், விலைவாசி உயர்வை கண்டித்தும், மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

நாமக்கல்–மோகனூர் ரோட்டில், பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் மணிவேல் துவக்கி வைத்தார். முன்னாள் செயலாளர் குழந்தான் முன்னிலை வகித்தார்.

மறியல் போராட்டத்தில், மின் திருத்த மசோதாவை கைவிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். கட்டுக்கடுங்காத நூல் விலை உயர்வால், சைசிங், விசைத்தறி தொழில்கள் நலிவடைந்துள்ளது. சிறு, குறு விசைத்தறி தொழில்கள் அதிக அளவில் மூடப்பட்டு வருகின்றன. அதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுக்கு, ரூ. 2 கோடி பேருக்கு வேலை என்ற வாக்குறுதியை நிறைவேற்றவேண்டும். அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இ.கம்யூனிஸ்ட் நிர்வாகிகள், உறுப்பினர்களில், 44 பெண்கள் உட்பட, 150 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் அழைத்துச் சென்றனர்.

Updated On: 30 Aug 2022 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எப்போதும் குழந்தைகளுடன் உறங்கும் பெற்றோரா நீங்கள்? இதை படியுங்க..!
  2. லைஃப்ஸ்டைல்
    மனைவியுடன் சண்டையில் கணவன் தோற்பது சகஜமப்பா..! அது பெருந்தன்மை..!
  3. மானாமதுரை
    வெளி நாட்டில் வேலைக்கு சென்ற கணவரை மீட்க , மனைவி மனு!
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான சுவையில் வாழைப்பூ வடை செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    பல் பிரச்னைகளுக்கு வீட்டு வைத்தியம் என்னென்ன?
  6. குமாரபாளையம்
    பேருந்து நிலையத்தில் இட பற்றாக்குறை, வழியில் நிற்கும் பேருந்துகளால்...
  7. லைஃப்ஸ்டைல்
    நொச்சி இலையின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா?
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து வசதி இல்லை;...
  9. கிணத்துக்கடவு
    கேரளாவில் பறவை காய்ச்சல் ; கோவை மாவட்ட எல்லைகளில் சோதனை தீவிரம்
  10. வணிகம்
    வியாபாரத்தில் தரமும் நம்பிக்கையும் இரண்டு கண்கள்..!