/* */

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மையம்

நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் 1,731 அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

HIGHLIGHTS

10ம் வகுப்பு பொதுத்தேர்வு:  அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் மையம்
X

நாமக்கல் மாவட்டத்தில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அறை கண்காணிப்பு பணியில் ஈடுபடுபவர்களை, மாவட்ட கல்வி அலுவலர் குலுக்கல் மூலம் தேர்வு செய்து ஒதுக்கீடு செய்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் 1,731 அறை கண்காணிப்பாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகம் முழுவதும் வருகிற ஏப்ரல் 6ம் தேதி முதல் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்குகிறது. நாமக்கல் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 641 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். அதற்காக மாவட்டம் முழுவதும் 94 பள்ளிகளில் தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தேர்வு பணியில் 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 95 துறை அலுவலர்கள், 1,731 அறை கண்காணிப்பாளர்கள், 140 பறக்கும் படையினர், 9 கட்டுகாப்பு மைய அலுவலர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 69 பேர் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இந்தநிலையில் அறை கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

மாவட்ட கல்வி அலுவலர் ரவி கூட்டத்திற்கு தலைமை வகித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- பொதுத் தேர்வை சிறப்பான முறையில் நடத்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அறை கண்காணிப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள், துறை அலுவலர்கள், செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் மாணவர்களும், செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. தேர்வுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை முதன்மை கண்காணிப்பாளர்கள் வாழ்த்தி அனுப்ப வேண்டும்.

துண்டு சீட்டு (பிட்) வைத்து தேர்வு எழுதுவதை தவிர்த்து, நேர்மையான முறையில் தேர்வு எழுத மாணவர்களை அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அறை கண்காணிப்பாளர்கள் பணியாற்றும் மையங்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டன. கூட்டத்தில், பள்ளிக்கல்வி துணை ஆய்வாளர் பெரியசாமி, கண்காணிப்பாளர் விக்டர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 30 March 2023 3:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் வீட்டில் ஒரு கொலைகாரன்.. அன்றாட பொருட்களே ஆபத்தான ஆயுதங்கள்!
  2. லைஃப்ஸ்டைல்
    கண்ணெதிரே வாழும் கடவுள், 'அப்பா'..!
  3. நாமக்கல்
    நாமக்கல் தொகுதியில் விறுவிறுப்பு: 2 மணி நேரத்தில் 12.88 சதவீதம்...
  4. தொழில்நுட்பம்
    ராக்கெட்டின் திறனை அதிகரிப்பதில் இஸ்ரோ பெரும் சாதனை
  5. இந்தியா
    சபாஷ் தேர்தல் ஆணையம்...!
  6. இந்தியா
    இனிப்புகள், மாம்பழம் சாப்பிடும் அரவிந்த் கெஜ்ரிவால்..!
  7. தமிழ்நாடு
    ஜிபிஆர்எஸ் பொருத்தப்பட்ட வாகனங்களில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள்..!
  8. கோவை மாநகர்
    கோவையில் வாக்குப்பதிவு துவக்கம்: திமுக, அதிமுக வேட்பாளர்கள்...
  9. லைஃப்ஸ்டைல்
    சாலையில் செல்லும் போது விபத்து ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது?
  10. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்