நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ. 4.50

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு ஏற்பட்டு ஒரு முட்டை விலை ரூ. 4.50ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 பைசா சரிவு :ஒரு முட்டை விலை ரூ. 4.50
X

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை திடீரென்று 10 பைசா சரிவடைந்து, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு 8 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள் கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) வாரத்தில் இண்டு முறை முட்டை விலையை நிர்ணயம்செய்து அறிவிக்கிறது. நெஸ்பேக் அமைப்பு முட்டை வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய வேண்டிய மைனஸ் விலையை நெக் விலையில் இருந்து குறைத்து அறிவிக்கிறது. இந்த முட்டை கொள்முதல் விலை, தட்பவெட்ப நிலை, திருவிழா, பண்டிகை காலங்களின் தேவை, முட்டை நுகர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு முட்டை விலை ரூ. 5.60 ஆக இருந்தது. அந்த விலை படிப்படியாக சரிவடைந்து ஒரு முட்டை விலை ரூ. 4.40 ஆக நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கோழிப்பண்ணைத் தொழிலில் கடும் நஷ்டம் ஏற்பட்டு பண்ணையாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். பின்னர் முட்டை விலை உயரத்துவங்கி ஒரு முட்டை விலை ரூ.4.60 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மண்டல என்இசிசி கூட்டம் அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.60 ஆக இருந்த ஒரு முட்டையின் முட்டை விலை 10 பைசா குறைக்கப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ. 4.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 480, பர்வாலா 407, பெங்களூர் 475, டெல்லி 419, ஹைதராபாத் 425, மும்பை 485, மைசூர் 480, விஜயவாடா 438, ஹொஸ்பேட் 435, கொல்கத்தா 507.

கோழிவிலை: பிராய்லர் கோழி உயிருடன் ஒருகிலோ ரூ.95 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ. 60 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

Updated On: 24 March 2023 2:54 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கோவையில் ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததில் மூவர் உயிரிழப்பு
  2. உடுமலைப்பேட்டை
    உடுமலை; அமராவதி அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு; விவசாயிகள்...
  3. சினிமா
    கீர்த்தி சுரேஷ் கடகடவென 20 கிலோ எடை குறைத்தது எப்படி? இப்படித்தானாம்!
  4. தூத்துக்குடி
    தி.மு.க. ஒன்றிய செயலாளர் கையில் சட்டம் ஒழுங்கு: அண்ணாமலை விமர்சனம்
  5. திருச்செந்தூர்
    திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: பாதுகாப்பு ஏற்பாடுகளை...
  6. சினிமா
    எதிர்நீச்சலில் எண்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகர்! அய்யய்யோ இவரா இவரு...
  7. தமிழ்நாடு
    வருங்கால வைப்பு நிதி அதிக ஓய்வூதியம்: விண்ணப்பிக்க காலக்கெடு...
  8. தஞ்சாவூர்
    தஞ்சை மாவட்டத்தில் சட்டப்பேரவை மனுக்கள் குழு ஆய்வு: மனுக்கள்...
  9. திருப்பூர்
    திருப்பூரை விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க, கலெக்டர் அறிவுறுத்தல்
  10. தமிழ்நாடு
    புதிய டுவிட்டர் கணக்கு தொடங்கிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...