/* */

நாமக்கல்லில் இன்று முட்டை விலை 460 காசு

namakkal news, namakkal news today- நாமக்கல்லில், இன்று முட்டை விலை 460 காசுகளாக உள்ளது. கடந்த ஜனவரி 9ம் தேதி, 565 காசுகளாக, இருந்த முட்டை விலையில், தற்போது கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

HIGHLIGHTS

நாமக்கல்லில் இன்று முட்டை விலை 460 காசு
X

namakkal news, namakkal news today- நாமக்கல்லில் இன்று ஒரு முட்டை விலை 460 காசுகளாக உள்ளது.

namakkal news, namakkal news today- நாமக்கல் மண்டலத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, பல்லடம், திருப்பூர் உள்பட பல பகுதிகளில் 1000-த்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலையை கிலோவுக்கு 8 ரூபாய் குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி 92 ரூபாயாக இருந்த கறிக்கோழி விலை நேற்று 84 ரூபாயாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டது. தைப்பூசத்தையொட்டி கறிக்கோழியின் நுகர்வு குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதேபோல நாமக்கல் மண்டலத்தில் 5 கோடிக்கும் அதிகமாக முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் தினமும் 4.5 கோடி முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. முட்டை கோழி பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் முட்டை கோழி விலை மாற்றம் செய்யாமல் ஒரு கிலோ 79 ரூபாயாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 460 காசுகளாக நீடிக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி 550 காசுகளாக இருந்த முட்டை விலை ஜன.9-ம் தேதி 565 காசுகளாக உயர்ந்தது. கடந்த 21-ம் தேதி 20 காசுகள் சரிவடைந்து 545 காசுகளாகவும், 25-ம் தேதி மேலும் 30 காசுகள் குறைக்கப்பட்டு 515 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மேலும் 25 காசுகள் குறைக்கப்பட்டு 490 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த ஒரு வாரத்தில் முட்டை விலை 75 காசுகள் சரிந்ததால் பண்ணையாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (காசுகளில்): சென்னை 500, பர்வாலா 470, பெங்களூரு 495, டெல்லி 495, ஹைதராபாத் 490, மும்பை 550, மைசூரு 495, விஜயவாடா 490, ஹோஸ்பேட் 455, கொல்கத்தா 540 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல் மண்டலத்தில், ஒரு முட்டை 460 காசுகளாக உள்ளது. எனினும் முட்டை விலை உயர்த்தப்பட்ட போது, மளிகை கடைகளில் விற்கப்பட்ட விலைகளில் மாற்றமின்றி அதே விலை நீடிக்கிறது. இதேபோல், அசைவ ஓட்டல்களில் ஆம்லேட், ஆப்பாயில், கலக்கி போன்ற முட்டை கொண்டு தயாரிக்கப்படும் 15 ரூபாய் முதல், 25 ரூபாய் விலை அதிகமாக உள்ளது. இதனால், முட்டை பிரியர்கள் அதிருப்தியடைகின்றனர்.

Updated On: 4 Feb 2023 9:01 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...