/* */

வரும் 11ம் தேதி நாமக்கல் மாவட்ட பள்ளி மாணவர்களின் கலைப்போட்டிகள்

Namakkal News Today - தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நாமக்கல் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு கலைப்போட்டிகள் நடைபெறுகிறது.

HIGHLIGHTS

வரும் 11ம் தேதி நாமக்கல் மாவட்ட பள்ளி மாணவர்களின் கலைப்போட்டிகள்
X

பைல் படம்.

Namakkal News Today - தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நாமக்கல் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு கலைப்போட்டிகள் நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளி மாணவ, மாணவியர்களின் கலைப் போட்டிகள் தமிழக அரசின் உத்தரவின் பேரில், மாவட்ட மற்றும் வட்ட அளவில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் நடைபெறும் இந்த கலைப்போட்டிகள் தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த கலைப்போட்டியின் மூலம் மாணவர்களின் திறமையையும், உத்வேகத்தையும் வெளிக்கொண்டுவர முன் முயற்சியாகவும் இது அமைந்துள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இந்த கலைப்போட்டிகள் நடைபெற்று வருகிறது. மாணவ, மாணவிகள் இந்த போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.

Namakkal News

இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கு கலைப்போட்டிகள் வரும் 11ம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கலை பண்பாட்டுத்துறை, தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் வாயிலாக, 2022-2023 ஆம் நிதியாண்டில் 5-8 / 9-12 / 13-16 வயது வகை சிறார்களுக்கிடையே கலை ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் குரலிசை, பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம் மற்றும் ஓவியம் ஆகிய நான்கு கலைப் பிரிவுகளில், மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தி, 9-12 / 13-16 ஆகிய வயது பிரிவில் மாவட்ட கலைப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவிலான போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெறுகின்ற மாணவர்களுக்கு அரசின் சார்பில் பாரட்டுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், கோட்டை நகரவை உயர்நிலைப்பள்ளியில், வரும் 11ம் தேதி அன்று மாவட்ட அளவிலான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. காலை காலை 10 மணிக்கு குரலிசைப் போட்டி, பரதநாட்டிய போட்டி, நாட்டுப்புற நடனப் போட்டி, ஓவியப்போட்டி நடைபெறும். குரலிசைப் போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம்.

தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற நடனப் போட்டியில் அதிகபட்சம் 4 நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. நாட்டுப்புற நடனப்போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்கால்குதிரை, தப்பாட்டம் போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெற வேண்டும்.

ஓவியப் போட்டியில், ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரம் வேண்டுவோர் சேலம் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை 0427 2386197 அல்லது 94432 24921 எண்ணில் தொடர்புக் கொள்ளலாம்.

Updated On: 2 Dec 2022 8:04 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்