/* */

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது

HIGHLIGHTS

உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாட்டம்
X

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது


குமாரபாளையத்தில் உலக பத்திரிக்கை சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1993ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தீர்மானத்தின் படி ஆண்டுதோறும் மே 3ம் நாள் பத்திரிக்கை சுதந்திர நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மனித உரிமைகள் சாசனம் படி, பேச்சுரிமைக்கான சுதந்திரத்தை உலக நாடுகளின் அரசுகளுக்கு நினைவூட்டவும், ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு நாளாக பிரகடனப்படுத்தப்பட்டது. அடிப்படை உரிமைகளை வெளிப்பப்டுத்தக்கூடிய வகையில் பத்திரிகை சுதந்திரம் இருக்க வேண்டும், பத்திரிக்கையையும், பத்திரிகை சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டும் எனவும் யுனெஸ்கோ கூறுகிறது.

உலக பத்திரிக்கை சுதந்திர தினத்தையொட்டி, குமாரபாளையம் விடியல் ஆரம்பம் சார்பில் தினசரி நாளிதழ் வாசிப்பு நிகழ்வு, அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. இதில் மாணவ, மாணவியர்களுக்கு நாளிதழ்கள் வழங்கப்பட்டு வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கப்பட்டது. பஞ்சாலை சண்முகம் பங்கேற்று, நாளிதழ்கள் எவ்வாறு வந்தது என, விளக்கவுரையாற்றினார். இதில் நாள்தோறும் நாளிதழ் வாசிப்போம் என மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதில் தீனா, சித்ரா உள்பட பலர் பங்கேற்றனர்.




Updated On: 4 May 2023 6:04 AM GMT

Related News