Begin typing your search above and press return to search.
குமாரபாளையம் அரசு கல்லூரியில் பயிற்சி பட்டறை
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடைபெற்றது.
HIGHLIGHTS

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் நடைபெற்ற ஒரு நாள் பயிற்சி பட்டறையில் கல்லூரி முதல்வர் ரேணுகா பேசினார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், வணிக நிர்வாகவியலில் மாணாக்கர்களுக்கு உளவியல் நலன், என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி பட்டறை கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் நடைபெற்றது.
முதல்வர் ரேணுகா பேசுகையில், மாணவ பருவத்தில் மன அழுத்தத்தை தவிர்த்து உளவியல் நலன் காக்க வேண்டும், கவன சிதறல்களை தவிர்த்து நிர்வாக திறமைகளை மேம்படுத்துவதற்கான உளவியல் சார்ந்த யுக்திகளை கையாள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பேராசிரியர்கள் கீர்த்தி, கண்ணன், காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் பங்கேற்றனர்.