/* */

ஆசிரியையின் சான்றிதழை திருப்பித்தர பள்ளி நிர்வாகம் ஒப்புதல்

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தனியார்பள்ளி முன் நடத்திய போராட்டத்தின்போது சுமூக உடன்பாடு ஏற்பட்டது

HIGHLIGHTS

ஆசிரியையின்  சான்றிதழை திருப்பித்தர   பள்ளி நிர்வாகம் ஒப்புதல்
X

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தனியார் பள்ளி முன் நடத்திய தர்ணா போராட்டத்தின்போது போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக ஆசிரியையின்சான்றிதழ் திருப்பித் தர பள்ளி நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்தது

குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் தனியார் பள்ளி முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது, போலீசார், வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதன் பலனாக ஆசிரியை நகல் சான்றிதழை திருப்பித்தர பள்ளி நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.

குமாரபாளையம் நாராயண நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 2013 முதல் 2016 வரையிலான சமயத்தில் கத்தேரி சாமியம்பாளையம் பகுதியை சேர்ந்த சுதா( 34,) என்ற மாற்றுத்திறனாளி, ஆசிரியையாக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் ஏற்பட்ட விபத்தில் காலில் அடிபட்டு, சிகிச்சை செய்து வந்தார். பள்ளிக்கு செல்ல முடியாத நிலையில், பள்ளியில் கொடுக்கப்பட்டதாக கூறும் தனது ஆசிரியை கல்வித்தகுதி சான்றிதழை தன்னிடம் திருப்பிக் கொடுக்குமாறு பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை சான்றிதழ் வழங்காததால், தான் உறுப்பினராக உள்ள தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தில் புகார் செய்தார். இதையடுத்து சங்க நிர்வாகிகள், நேற்று காலை முதல் மாலை வரை பள்ளி முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் எஸ்.ஐ.மலர்விழி, ஆர்.ஐ. முருகேசன், வி.ஏ.ஓ.-க்கள் முருகன், ஜனார்த்தனன், பள்ளிக்கு நேரில் வந்து, நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். காலை 10 மணியளவில் தொடங்கிய போராட்டம் மாலை 4 மணிக்கு மேலும் நீடித்த நிலையில், ஆசிரியையின் நகல் சான்றிதழை திருப்பித்தருவதாக பள்ளி நிர்வாகம் சம்மதித்ததால் பிரச்னை முடிவுக்கு வந்தது.

மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த 1993ஆம் ஆண்டில் ஊனமுற்றோருக்கான தனி இயக்ககம் சமூக நல இயக்ககத்திலிருந்து பிரித்து ஏற்படுடுத்தப்பட்டது. 1994 ஆம் ஆண்டு முதன் முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான விரிவான மாநிலக் கொள்கையை வெளியிட்டது.

இத்துறை, மாற்று திறனாளிகள் (சமவாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995-ன் படி ஊனமுற்றோருக்கான மாநில ஆணையர் அலுவலகமாக 1999 ஆம் ஆண்டு நிலை உயர்த்தப்பட்டு, இந்திய ஆட்சிப் பணி நிலையிலுள்ள உயர் அலுவலர் ஊனமுற்றோருக்கான மாநில ஆணையாக நியமிக்கப்பட்டார்.

மாற்றுத் திறனாளிகளுக்குள்ள தனிப்பட்ட திறமைகளைக் கருத்தில் கொண்டு, அவர்களை உடல் ஊனமுற்றோர், குருடர், செவிடர் என்று அழைப்பதைத் தவிர்த்து அவர்கள் மீது சமுதாயம் கொண்டுள்ள கண்ணோட்டத்தை மாற்றுவதற்கென இனி அவர்களை மாற்றுத் திறனாளிகள் என அழைக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசால் மாற்றுத் திறனாளிகள் நலனுக்கென சமீபத்தில் தலைமைச் செயலகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை என தனியாக ஒரு நிர்வாகத் துறை துவக்கப்பட்டது.

மாற்றுத் திறனாளிகள் சமுதாயத்தில் ஒரு அங்கமாக அனைவரும் ஏற்கவும், சமுதாய வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்பதற்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழுபங்கேற்பை உறுதி செய்வதற்கும் உரிய விழிப்புணர்வை அரசு ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், எந்த ஒரு கல்வி நிறுவனமும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் சான்றிதழ்களை அவர்கள் வேலை விட்டுச்செல்லும்போது நிபந்தனையின்றி திருப்பிக் கொடுக்க வேண்டுமென நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும் இந்த தனியார் கல்வி நிறுவனம் அங்கு பணியாற்றிய ஆசிரியையின் சான்றிதழை திருப்பித்தர மறுத்ததால் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.


Updated On: 30 Jan 2023 2:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
  2. மதுரை
    மதுரை சித்திரை திருவிழா: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்!
  3. தமிழ்நாடு
    மாபெரும் இழப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி என பாடம் எடுக்கும்...
  4. இந்தியா
    67 தரமற்ற மருந்துகள் ஆய்வில் கண்டுபிடிப்பு..!
  5. ஆன்மீகம்
    தந்தைக்கு மந்திரம் சொன்ன ஞானப்பண்டிதா எமக்கருள்வாய்..!
  6. விளையாட்டு
    சர்வதேச கிரிக்கெட்டில் 39 முறை தவறான அவுட்டால் வெளியேறிய சச்சின்
  7. இந்தியா
    இவிஎம், விவிபாட் இயந்திரங்கள் விவகாரம்: உச்சநீதிமன்ற தீர்ப்பு...
  8. தமிழ்நாடு
    அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்
  9. தமிழ்நாடு
    உடல் பருமனைக் குறைக்கும் சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழப்பு
  10. கோயம்புத்தூர்
    கொளுத்தும் கோடை வெயில், தவிக்கும் கோவை மக்கள்