/* */

கூட்டு குடிநீர் குழாயில் வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தி

குமாரபாளையம் அருகே கூட்டு குடிநீர் குழாயில் வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

கூட்டு குடிநீர் குழாயில் வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தி
X

பைல் படம்

குமாரபாளையம் அருகே கூட்டு குடிநீர் குழாயில் வீணாகும் குடிநீரால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

குமாரபாளையம் அருகே புள்ளாக்கவுண்டம்பட்டியில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் காவிரி ஆற்றில் குடிநீர் எடுக்கப்பட்டு குமாரபாளையம் அருகே உள்ள தட்டான்குட்டை, குப்பாண்டபாளையம், திருச்செங்கோடு, சங்ககிரி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய குழாய் அமைக்கும் பணிகள் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று, தற்போது நிறைவு அடைந்துள்ளது.

இதன் குடிநீர் குழாய் ஒன்று சேலம் சாலை, குளத்துக்காடு பவர் ஹவுஸ் அருகே வருகிறது. தற்போது காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு, குழாய்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒருகட்டமாக குளத்துக்காடு பகுதி குழாயில் இருந்து அதிக குடிநீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இப்பகுதி மக்கள் தினமும் குடிநீருக்காக வெகு தொலைவு சென்று குடிநீர் எடுத்து வரும் நிலையில், இது போல் தண்ணீர் வெளியேறி வருவதால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது பற்றி தட்டான்குட்டை ஊராட்சி தலைவி புஷ்பா கூறியதாவது: கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதால், குடிநீர் குழாய்களில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதனால் இப்படி தண்ணீர் வெளியேறத்தான் செய்யும். சில நாட்களில் சரி செய்யப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கூடுக்குடிநீர் திட்டம் குறித்து அதிகாரிகள் கூறியதாவது: காவிரி கூட்டு குடிநீர் திட்டம்-திட்ட அறிக்கை பெறப்பட்டு ரூ.9,660 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளது என்று அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார். தமிழக துணை சபாநாயகர் கு பிச்சாண்டி , கீழ்பென்னாத்தூர் தொகுதி , வேட்டவலம் பேரூராட்சிக்கு, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்க அரசு ஆவன செய்யுமா என கேள்வி எழுப்பினார்.

நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என் நேரு கூறுகையில் ,கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சி பகுதிகளில் ஓரளவு பணிகள் தான் நடைபெற்று உள்ளது. 490 பேரூராட்சி பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அருகில் இருக்கும் குடிநீர் ஆதாரங்களை மூலம் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யபட்டு வருகிறது. 130 பேரூராட்சி கள் தேர்வு செய்யப்பட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை வேலூர் ஆகிய மாவட்டங்கள் பயன் பெற கூடிய வகையில் 9,660 கோடி ரூபாய் செலவில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான திட்ட அறிக்கை பெறப்பட்டுள்ளது. முதல்வருடன் கலந்து பேசி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றுகூறினார்.

கரூர் மாவட்டம் வழியாக ஓடும் காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கரூர் மாவட்டம் தவிர, அருகிலுள்ள திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்குக் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. அப்படி, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள காவிரி ஆற்றுப்பகுதியில் திருமாநிலையூர் என்ற இடத்திலிருந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதிக்கு ராட்சதக் குழாய்கள் மூலம் மின்மோட்டார்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கரூர் மாவட்டம், கடவூர் அருகேயுள்ள தரகம்பட்டி டு மணப்பாறை சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இரவு பகலாக ஜே.சி.பி இயந்திரங்கள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரகம்பட்டி கடைவீதி அருகேயுள்ள மணப்பாறை சாலையில் குடிநீர்க் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு சுமார் 30 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் வெளியேறியது.

இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், குடிநீர்க் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் கொள்ளளவு தண்ணீர் வீணாக சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதைக் காண அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அடிக்கடி இப்படி நடக்கிறது. வேறு பணிகள் செய்யும்போது, இங்குள்ள காவிரி கூட்டுக் குடிநீர்க் குழாயை உடைத்து விடுகிறார்கள். அதனால், எங்கப் பகுதியில் உள்ள பல கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது பொதுமக்கள் தெரிவித்தனர்.

குடிநீர் வீணாவதை உணர்த்துவதற்காக, இளைஞர் ஒருவர் அப்படிப் பீறிட்டு வான் நோக்கி பீய்ச்சி அடித்த தண்ணீரில் குளித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.இதற்கிடையில், கடவூர் வட்டாட்சியர் மூலம் குடிநீர் வடிகால் வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, காவிரி ஆற்றில் இயக்கப்படும் மின்மோட்டார்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. இருப்பினும் சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக தண்ணீர் வெளியேறியது. அதன் காரணமாக, குடிநீர் உடைப்பு ஏற்பட்ட பகுதிக்கு அருகே இருந்த அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்துக்குள் குடிநீர் புகுந்தது. இதனால், அங்கிருந்த மாணவர்கள் பள்ளியைவிட்டு அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதுதவிர, கரூர் தரகம்பட்டி மணப்பாறை நெடுஞ்சாலையில் செல்லும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மேலும், குடிநீர் குழாய் உடைப்பைச் சரிசெய்வதற்கு இரண்டு நாள்களுக்கு மேல் ஆகும் என்பதால், திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிக்குச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

இந்த நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், தரகம்பட்டி, மணப்பாறை சாலை விரிவாக்கப் பணிகளின்போது ஏற்பட்ட குடிநீர் குழாய் உடைப்புக்கு அப்பணிகளை மேற்கொண்டு வரும் ஒப்பந்ததாரரின் கவனக்குறைவே காரணம்.நவீன இயந்திரங்களைக் கொண்டு சாலைப் பராமரிப்புப் பணி மேற்கொள்ளும்போது, குடிநீர்க் குழாய்கள் பாதிக்கப்பட்டன. எனவே, குடிநீர்க் குழாய்கள் செல்லும் பகுதிகள் மற்றும் தொலைத் தொடர்பு கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ள இடங்களில் உரிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.




Updated On: 8 Dec 2022 2:30 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    தைராய்டு தடுப்பது எப்படி? தெரிஞ்சுக்கங்க..!
  2. சினிமா
    தலைவர் 171 இயக்குநரின் புது அறிவிப்பு! என்ன தெரியுமா?
  3. வீடியோ
    🔴LIVE: தேனியில் டிடிவி. தினகரன் தேர்தல் பிரச்சாரம் | TTV.Dhinakaran |...
  4. வீடியோ
    2G ஆடியோவை வெளியிட்ட காரணத்தை வெளிப்படையாக சொன்ன Annamalai !...
  5. காஞ்சிபுரம்
    தனியார் மருத்துவமனையில் கிராமப்புற ஐ சி யு சேவை: துவக்கி வைத்த...
  6. சினிமா
    Thalaivar 171 Title இதுவா? என்னங்க சொல்றீங்க!
  7. ஈரோடு
    சித்தோடு ஸ்ரீ வாசவி கல்லூரியில் 57-வது ஆண்டு விழா கொண்டாட்டம்
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குபதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு...
  9. உத்திரமேரூர்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 15 வேட்பு மனுக்கள் ஏற்பு
  10. காஞ்சிபுரம்
    சின்னம் பெறுவதில் சில கட்சிகளுக்கு சிக்கல் ஏன்? ஜி.கே. வாசன் விளக்கம்