/* */

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா...

குமாரபாளையத்தில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொங்கல் விழா...
X

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட் பொங்கல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற தீர்த்த குட ஊர்வலம் நிகழ்ச்சியில் பங்கேற்றோர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் தினசரி மார்க்கெட் உள்ளது. இந்த தினசரி மார்க்கெட்டில் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான பொங்கல் விழா சங்க தலைவர் துரைசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காவேரி ஆற்றில் இருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

ஆற்றில் இருந்து மேள, தாளங்களுடன் பெண்கள் மஞ்சள் ஆடை அணிந்தவாறு தீர்த்தக்குடங்கள், அக்னி சட்டிகள் எடுத்தவாறு ஊர்வலமாக சென்றனர். பின்னர், மார்க்கெட் வளாகத்தில் உள்ள அம்மனுக்கு மற்றும் முத்து முனியப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடத்தப்பட்டன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

தொடர்ந்து, விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின்போது, குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன், திமுக நகர செயலாளர் செல்வம், அதிமுக நகர செயலாளர் பாலசுப்ரமணி ஆகியோர் அன்னதானம் வழங்கினர். நிகழ்ச்சியில், குமாரபாளையம் தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தாமோதரன், சந்திரசேகர், பிரபு, சித்தன், சுப்ரமணி, நாகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பொங்கல் விழா குறித்து குமாரபாளையம் தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நலச்சங்க தலைவர் துரைசாமி கூறியதாவது:

குமாரபாளையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஆண்டுதோறும் ஆண்டுவிழா மற்றும் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். குமாரபாளையம் நகரில் வாரச்சந்தையில் பிரதி வெள்ளிகிழமை கூடுவது வழக்கம். அதை விட்டால் மற்ற நாட்களில் தினசரி காய்கறி மார்க்கெட்டில் வந்து பொதுமக்கள் காய்கறிகள் வாங்கி வந்தனர்.

ஆனால், தற்போது எம்.ஜி.ஆர், நகர், வட்டமலை, கல்லங்காட்டுவலசு உள்ளிட்ட பல இடங்களில் செவ்வாய், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் சந்தை கூடுவதால் அந்தந்த பகுதி மக்கள் காய்கறிகள் அங்கு வாங்கி கொள்கிறார்கள். இதனால் தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் வியாபாரம் இல்லாமல் கஷ்டத்திற்கு ஆளாகி வருகிறார்கள். அந்த துன்பம் எல்லாம் நீங்க வேண்டியும், மீண்டும் கொரோனா வராமல் இருக்கவும் வேண்டித்தான் பொங்கல் விழா நடைபெற்றது என துரைசாமி தெரிவித்தார்.

Updated On: 4 Jan 2023 4:45 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...