அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறன் போட்டிகள்

குமாரபாளையத்தில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசு பள்ளி மாணவ, மாணவியரின் தனித்திறன் போட்டிகள்
X

குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன்படி குமாரபாளையம் மேற்கு காலனி நகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கான தனிதிறன் வெளிக்கொணர ஓவியம், வர்ணம் தீட்டுதல், களிமண் உருவம் செய்தல், கட்டுரை, மொழித்திறன், திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்கள் பள்ளி அளவிலான போட்டியிலும், வட்டார அளவிலான போட்டியிலும் பங்கேற்க உள்ளனர். வெற்றி பெறும் மாணவ, மாணவியர்கள் முதல்வர் கையால் பரிசு பெறுவதுடன், கல்வி சுற்றுலா செல்லவும் தமிழக அரசால் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இதில் பி.டி.ஏ. தலைவர் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாமில் முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு

குமாரபாளையம் அரசு பி.எட்.கல்லூரியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார். இதில் பள்ளிபாளையம் வட்டார அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் 268 பேர் பங்கேற்றனர். இது பற்றி மகேஸ்வரி கூறியதாவது:

அரசு பள்ளிகளில் 2ம் பருவ பாட புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதால், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு எழுத்தும் பயிற்சி முகாம் 15 வகுப்புகளில் நடைபெற்றது. குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கியுள்ளது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. விரைவில் அதற்கான தீர்வு நடவடிக்கைகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசின் ஒவ்வொரு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது கல்வித்துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என அனைவரும் எதிர்பார்ப்பது ஒன்று. ஏனெனில் இன்றைய மாணவர்கள், நாளைய எதிர்காலம் என்பதால், அவர்கள் கல்வி பெற அதிக நிதி ஒதுக்கீடு செய்யபடுகிறது. இதன் மூலம் கல்வி உதவி தொகை, நோட்டுகள், புத்தகங்கள், கல்வி உபகரணங்கள், மடி கணினி, சீருடை, மதிய உணவு, பள்ளி மற்றும் கல்லூரி கட்டுமான பணிகள், தேர்வு செலவினங்கள், ஆசிரியர் சம்பளம், உள்ளிட்ட பல செலவுகள் செய்யபடுகிறது.

வட்டார வள மையங்கள் மூலம் ஆசிரியர் பயிற்றுனர்களால் சிறந்த ஆசிரியர்களை உருவாக்கி, அவர்கள் மூலம் கற்பிக்கபட்டு, தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்கள் தேர்ச்சி விகிதம் கொண்டு வருகிறார்கள். முதல் பட்டதாரி, பெண் குழந்தைகள் கல்வி உள்ளிட்டவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கற்றோருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு, எனும்படி, மாணவ, மாணவியர்கள் அரசு பள்ளியில் படித்தாலும், நன்கு படித்து வாழ்வில் முன்னேற்றம் பெறுகிறார்கள்.

மற்ற மாநிலங்களில் இல்லாத அளவிற்கு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்களின் வாழ்க்கையை தமிழக அரசு தரமுள்ளதாக ஆக்குகிறது. சில தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் தகுதி தேர்வு பயிற்சிகள் கொடுக்கப்பட்டு, பல்வேறு தேர்வுகளில் கலந்து கொண்டு, அதிக மதிப்பெண்கள் பெற்று, சாதனை படைத்து வருகிறார்கள். என்.சி.சி. மூலம் சிறந்த பயிற்சி பெற்று, ராணுவ துறையில் சேர்ந்து சேவை செய்யும் மாணவர்களும் உண்டு.

மாணவர்களுக்கு கல்வி கற்பித்து, அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவதை பார்த்து சந்தோசப்படும் நபர் ஆசிரியர்களே..அவர்கள் ஏணியாக நின்று உதவி செய்து, பலருக்கும் ஏணியாக இருந்து மாணவர் சமுதாயத்தினை உருவாக்கி வருகிறார்கள்.

இதில் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) கனகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Updated On: 24 Nov 2022 12:48 AM GMT

Related News

Latest News

 1. தேனி
  தேனியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்.. நிரந்தர தீர்வுக்கு செய்ய...
 2. தேனி
  தேனி மாவட்டத்தில் இரண்டாம் போக நெல் நடவுப் பணிகள் நிறைவு..
 3. மதுரை மாநகர்
  இயற்கை முறையில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு...
 4. விராலிமலை
  கீரனூரில் இருந்து புலியூருக்கு பேருந்து வசதி: ஜனநாயக மாதர் சங்கம்...
 5. துறைமுகம்
  கடற்படை தினத்தையொட்டி போர்க் கப்பல்களை பார்வையிட்ட பள்ளி மாணவர்கள்
 6. சென்னை
  திருநெல்வேலி எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவு.. ஆதிதிராவிடர் மாநில ஆணையம்...
 7. புதுக்கோட்டை
  வருவாய்த்துறையினரை கண்டித்து சிபிஎம் கட்சியினர் காத்திருப்புப்...
 8. சென்னை
  தகுதி இல்லாதவர்களுக்கு அரசு வீடுகள் ஒதுக்கீடு.. அதிகாரிகள் மீது...
 9. சிவகாசி
  விபத்தை ஏற்படுத்திய பேருந்தை சிறைப்பிடித்து கிராம மக்கள் போராட்டம்
 10. இந்தியா
  விழிஞ்சம் துறைமுகத்தில் மத்தியப் படை பாதுகாப்பு கோரி அதானி குழுமம்...