தட்டச்சு தேர்வில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்

குமாரபாளையத்தில் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
தட்டச்சு தேர்வில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவியர்
X

பைல் படம்

குமாரபாளையத்தில் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர்.

மூன்று மாத இடைவெளிக்கு பிறகு தட்டச்சு தேர்வு நடைபெறுகிறது. கடந்த ஆகஸ்ட் 2022 ஆம் மாதம் நடைபெற உள்ள தட்டச்சு தேர்வுகள் பல்வேறு காரணங்களால் மூன்று மாதங்களுக்குப் பிறகு 26/11/2022, 27.11.2022 (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை) தமிழக முழுவதும்அரசு தொழில்நுட்ப தேர்வு வாரியத்தால் நடைபெற்று வருகின்றது.

இத்தேர்வு ஆயிரக்கணக்கான மாணாக்கர்கள் நீண்ட நாள் காத்திருந்துமடைதிறந்த வெள்ளம் போல் இத்தேர்வில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அதன்படி, ஈரோடு நாமக்கல் சேலம் ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தட்டச்சு பயிலகங்களில் தட்டச்சு பயின்ற சுமார் 2320 மாணவ மாணவிகள் குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் ஆர்வத்துடன் தட்டச்சு தேர்வை எழுதினர்.

மேலும் தேர்வு வாரியத்தால் தட்டச்சு தேர்வில் புதிய முறை அமல்படுத்தப்பட்டது அதாவது வழக்கமாக வேகத்தேர்வு முதல் தாளாகவும், புள்ளி விவர கடிதம் இரண்டாம் தாளாகவும் இருந்து வந்தது. ஆனால் கேள்வி வாரியம் கொண்டு வந்த புதிய முறையில் இரண்டாம் தாள் முதல் நாளாகவும், முதல் தாள் இரண்டாம் தாளாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டது. மேலும் இந்த புதிய முறை குறித்து தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்த மாணவ மாணவிகளிடம் முதன்மை கண்காணிப்பாளர் முனைவர் எஸ் விஜயகுமார் தேர்வு எவ்வாறு இருந்தது என்பதை கேட்டறிந்தார் .

அதற்கு மாணவ மாணவிகள் நாங்கள் எவ்வித அச்சமும் இன்றி பதட்டமும் இன்றி தட்டச்சு செய்ய உதவியாக இருந்தது என்றும், இந்த புதிய முறை எதிர்காலத்தில் தட்டச்சு மாணவ மாணவிகளுக்கு மிகவும் எளிமையானதாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.45 நிமிடங்கள் தட்டச்சு செய்த பிறகு, வேகத்தேர்வை எதிர்கொள்ளும் பொழுது இது நாள் வரையில் இருந்த பதற்றம் இல்லாமல் மன அழுத்தமின்றி சிறப்பாக தட்டச்சு செய்ய முடிந்தது என பெரும்பாலான மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் இனிவரும் காலங்களில் தேர்வு வாரியத்தால் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த புதிய முறை தட்டச்சு தேர்வு இதுவரை இல்லாத அளவில் தேர்வு விழுக்காடு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது என்பதே மாணவ மாணவிகளின் பரவலான கருத்தாக உள்ளது என்பதை குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வரும் தலைமை கண்காணிப்பாளருமான முனைவர் விஜய்குமார் தெரிவித்தார்.

Updated On: 26 Nov 2022 5:30 PM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  பாரம்பரிய மற்றும் மலை வாழிட நகரங்களுக்கு 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்க...
 2. தஞ்சாவூர்
  தஞ்சையில் தேசிய சிட்டிங் பாரா வாலிபால் போட்டிகள்
 3. லைஃப்ஸ்டைல்
  பர்சனாலிட்டியை நிர்ணயம் செய்வது எது? ஆள் பாதி...ஆடை பாதி:உங்களுக்கு...
 4. புதுக்கோட்டை
  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
 5. தூத்துக்குடி
  தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் திடீர் போராட்டம்.. போலீஸ்...
 6. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே ரயில் பாலத்தில் மின்கசிவு: அதிருஷ்டவசமாக உயிர்...
 7. புதுக்கோட்டை
  புதுக்கோட்டை அருகே வெள்ளாற்றங்கரையில் தைப்பூச தீர்த்தவாரி
 8. விளாத்திகுளம்
  விளாத்திக்குளத்தில் மினி மாரத்தான் போட்டி.. 300-க்கும் மேற்பட்டோர்...
 9. திருநெல்வேலி
  நெல்லை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 4 பேர் கைது
 10. தூத்துக்குடி
  காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நாளை தொடக்கம்.. ரயில்வே டிஐஜி...