/* */

பூட்டிய பள்ளிக்குள் மாணவன் அலறல் சத்தம்: குமாரபாளையத்தில் பரபரப்பு

குமாரபாளையத்தில் உடல்நிலை சரியில்லாத மாணவனை பள்ளிக்குள் வைத்து ஆசிரிய, ஆசிரியைகள் பூட்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

பூட்டிய பள்ளிக்குள் மாணவன் அலறல் சத்தம்: குமாரபாளையத்தில் பரபரப்பு
X

பைல் படம்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருபவர் சந்துரு, 16. இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் பள்ளியில் உள்ள தனி அறையில் உறங்கியதாக கூறப்படுகிறது.

பள்ளி வேலை நேரம் முடிந்ததும் அனைவரும் பள்ளியின் வகுப்பறைகள், முன்புற மெயின் கேட் எல்லாம் பூட்டி விட்டு சென்று விட்டனர். நேற்று இரவு 09:20 மணியளவில் பள்ளியின் உள்ளே இருந்து மாணவனின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

உடனடடியாக அக்கம் பக்கத்தினர் பள்ளியின் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த ஆசிரியர்கள் சிலர் கதவை திறந்து மாணவனை வெளியே அனுப்பி வைத்தனர்.

ஆசிரிய, ஆசிரியைகளின் இந்த மெத்தனப்போக்கு பொதுமக்களை அதிருப்தியடைய வைத்தது. மாணவனுக்கு தாய் இல்லை. தந்தை விசைத்தறி கூலித்தொழிலாளி. தினமும் வேலை முடிந்து இரவு 09:30 க்குத்தான் வருவார் என்பதால் அவருக்கும், தன் மகன் வீட்டுக்கு வராத தகவல் தெரியாமல் போனது.

Updated On: 23 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளில் தயார் நிலையில்...
  3. திருவண்ணாமலை
    12 வகையான மாற்று அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம்:...
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இலவச...
  5. லைஃப்ஸ்டைல்
    முகத்துக்கு ஐஸ் ஒத்தடம் தருவதால் இவ்வளவு நன்மைகளா?
  6. லைஃப்ஸ்டைல்
    ஹேர் சீரம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    குடிப்பழக்கத்திலிருந்து மீள நினைவில் கொள்ள வேண்டிய 8 முக்கிய
  8. இந்தியா
    மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை துவக்கம்
  9. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் சட்ட விரோதமாக மது விற்ற மூவர் கைது
  10. இந்தியா
    உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட க்ரூஸ் ஏவுகணை சோதனை வெற்றி