அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆக. 8 ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆக. 8 ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆக. 8 ல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு
X

பைல் படம்

குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆக. 8ல் 2ம் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இது பற்றி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் ரேணுகா வெளியிட்ட தகவவ்:குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022 - 2023 கல்வியாண்டிற்கு பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பொருளியல், பி.எஸ்.சி. கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியியல், பி.காம்., பி.பி.ஏ., ஆகிய பாடப்பிரிவுகளுக்கு 2ம் கலந்தாய்வானது ஆக. 8ல் காலை 09:30 மணியளவில் பொதுப்பிரிவு மாணாக்கர்களுக்கு நடைபெறவுள்ளது.

இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணாக்கர்களின் தர வரிசை பட்டியல் கல்லூரியின் இணைய தளம் மற்றும் கல்லூரி தகவல் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மின்னஞ்சல் மற்றும் மொபைல் போன் மூலமும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இணைய வழியில் பதிவு செய்த மாணாக்கர்கள் தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வருகை தந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுங்கள். அனைவரும் முக கவசம் அணித்து, சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Updated On: 6 Aug 2022 3:30 PM GMT

Related News