/* */

கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை

குமாரபாளையம் அருகே கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்கமேம்பாலம் அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

HIGHLIGHTS

கத்தேரி பிரிவில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க கோரிக்கை
X

கத்தேரி பிரிவு

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் சேலம் கோவை புறவழிச்சாலை கோட்டைமேடு பகுதியில் விபத்து உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டதால் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில் தற்போது மேம்பாலம் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இதேபோல் அதிக வாகனங்கள் சாலையை கடக்கும் பகுதியாக கத்தேரி பிரிவு உள்ளது. தட்டான்குட்டை ஊராட்சி, சத்யா நகர், வேமன்காட்டுவலசு, எம்.ஜி.ஆர். நகர் , குமாரபாளையம் நகரம், பவானி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த கத்தேரி பிரிவில்தான் சாலையை கடந்து செல்கிறது.

அரசு தொடக்கப்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தனியார் மற்றும் அரசு கல்லூரிகள் என கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவ, மாணவியர்களும் இந்த சாலையை கடந்துதான் சென்றாக வேண்டும். இதனால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இங்கு பல விபத்துக்கள் நடந்து பல குடும்பங்கள் தவித்து வரும் நிலையும் உண்டு. இதனை தவிர்க்க இங்கு மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் அரசு பள்ளி சாலை பகுதியில் விபத்து அச்சத்தில் மாணவ, மாணவியர் சாலையை கடந்து வருகிறார்கள்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகிறார்கள். பள்ளி நேரம் முடிந்து மாலை 04:30 மணியவில் ஆனங்கூர் பிரிவு பகுதியில் சேலம் சாலையை கடந்து செல்கின்றனர். அப்போது வேகமாக வரும் வாகனங்கள் மாணவ, மாணவியர் மீது மோதி, அதிக விபத்துகள் ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து செல்லும் நிலை இன்றும் தொடர்கிறது. சில நாட்கள் போலீசார் வந்து போக்குவரத்துக்கு சரி செய்வார்கள். பெரும்பாலான நாட்கள் போலீசார் இருப்பதில்லை. உயர் அதிகாரிகளின் உத்திரவின் பேரில் பல பணிகள் காரணமாக வேறு ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். புறவழிச்சாலையில் போக்குவரத்து போலீஸ் அலுவலகம் உள்ளது. அவர்களும் நகர எல்லைப் பகுதியில் வந்து போக்குவரத்து சீர் செய்வதில்லை.

குமாரபாளையம் சேலம் சாலையில் போலீஸ் ஸ்டேஷன் முதல் கத்தேரி பிரிவு சாலை வரை 2 கி.மீ. தூரத்திற்கு சாலையின் நடுவில் டிவைடர்கள் வைக்கப்பட்டுள்ளன. போலீஸ் ஸ்டேஷன், பள்ளிபாளையம் பிரிவு, ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் பிரிவு, குளத்துகாடு பாலம், பவர் ஹவுஸ் உள்ளிட்ட இடங்களில் உள்ள டிவைடர்களின் முகப்பில் ஒளிரும் விளக்குகள் இல்லாததால், இரவில் வரும் வாகனங்கள் இந்த டிவைடர்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகி பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். விபத்துக்களை தடுத்திடும் வகையில் இந்த டிவைடர்களில் ஒளிரும் விளக்குகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 31 March 2023 12:37 AM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    குறைந்த செலவில் பூச்சிக்கட்டுப்பாடு..! மஞ்சள் வண்ண ஒட்டுப்பொறி..! ...
  2. தென்காசி
    மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
  3. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
  4. காஞ்சிபுரம்
    வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
  5. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
  6. குமாரபாளையம்
    கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
  7. ஈரோடு
    ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
  8. காஞ்சிபுரம்
    அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
  9. காஞ்சிபுரம்
    12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!