/* */

பள்ளிபாளையத்தில் மூதாட்டிகளை கொலை செய்த சைக்கோ கைது

பள்ளிபாளையத்தில் மூதாட்டிகளை கொலை செய்த சைக்கோ இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் மூதாட்டிகளை கொலை செய்த சைக்கோ கைது
X

கைது செய்யப்பட்ட சைக்கோ இளைஞர்.

பள்ளிபாளையம் அருகே உள்ள ஓட பள்ளி பகுதியைச் சேர்ந்த பாவாகி என்ற மூதாட்டி கடந்த மார்ச் மாதம் கரும்பு காட்டில் கால்நடைகள் மேய்த்துக் கொண்டிருந்த பொழுது பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தறுத்து கொலை செய்ததுடன், அவர் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகை கொள்ளை போனது.

இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த 12-ம் தேதி பள்ளிபாளையம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த பழனியம்மாள் என்ற மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததுடன் அவர் அணிந்திருந்த தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இரு கொலைகளும் ஒரே மாதிரியாக இருந்ததால் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் ராஜு தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை பள்ளிபாளையம் எஸ்பிபி காலனி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த இளைஞரை போலீசார் கைது செய்து காவல் காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்பொழுது அவர் பெயர் செல்வம் என்றும், பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் இரு மூதாட்டிகளையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி நகைக்காக கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் அந்த இளைஞர் சைக்கோ என்று தெரிந்தது.

இதனையடுத்து பள்ளிபாளையம் போலீசார் இளைஞரை கைது செய்து குமாரபாளையம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Updated On: 21 May 2023 1:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி