Begin typing your search above and press return to search.
பள்ளிபாளையத்தில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி உயிரிழப்பு
பள்ளிபாளையத்தில் தனியார் பேருந்து மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
HIGHLIGHTS

பள்ளிபாளையத்தில் தனியார் பஸ் மோதி கூலி தொழிலாளி உயிரிழந்தார்.
பள்ளிபாளையம் அருகே தோக்கவாடி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன். கூலி தொழிலாளி. இவர் சொந்த வேலை காரணமாக அண்ணா நகர் வந்துவிட்டு இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு சாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஈரோட்டில் இருந்து திருச்செங்கோடு நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் படுகாயமடைந்த தொழிலாளி விஸ்வநாதன் சம்பவ இடத்தில் பலியானார். இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இது சம்பந்தமாக சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.