குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட பேச்சுவார்த்தை

குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குமாரபாளையத்தில் நாளை மறுநாள் விசைத்தறி தொழிலாளர்கள் 2ம் கட்ட பேச்சுவார்த்தை
X

குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிற்சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகி பாலசுப்ரமணி பேசினார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் 75 சதவீத கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பிப். 1 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகின்றனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளது. விசைத்தறி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் போராட்டத்தின் அடுத்த கட்டமாக அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பிப். 7ல் (இன்று) காலை 09:00 மணியளவில் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் கூலி உயர்வு கேட்டு விசைத்தறி தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது, இதையடுத்து பிப்.8ல் தாசில்தார் தலைமையில் நடைபெறவுள்ள முத்தரப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்பது, என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் விசைத்தறி சங்கங்களான எல்.பி.எப், ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.சி.சி.டி.யூ, எல்.டி.யூ.சி., எச்.எம்.எஸ்., உள்ளிட்ட விசைத்தறி கூட்டுத்தொழில் சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் பாலசுப்ரமணி, பாலுசாமி, ஆறுமுகம், சக்திவேல், வெங்கடேசன், செல்வராஜ், அருள் ஆறுமுகம், சரவணன், தண்டபாணி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் விசைத்தறி சங்கங்களான எல்.பி.எப், ஏ.ஐ.டி.யூ.சி, சி.ஐ.டி.யூ, ஏ.ஐ.சி.சி.டி.யூ, எல்.டி.யூ.சி. உள்ளிட்ட விசைத்தறி கூட்டுத்தொழில் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஊர்வலமாக வந்த தொழிற்சங்கத்தினர் வட்டாச்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.

குமாரபாளையம் விசைத்தறி தொழிற்சங்கங்கள் சார்பில் 20 சதவீத பொங்கல் போனஸ் கேட்டிருந்தனர். இதற்கு விசைத்தறி உரிமையாளர்கள் உடன்படவில்லை. இதனால் தாலுக்கா அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் சண்முகவேல் சில நாட்கள் முன்பு ஏற்பாடு செய்திருந்தார். இதில் விசைத்தறி உரிமையாளர்கள் பங்கேற்கவில்லை. அவர்கள் பங்கேற்க முடியாத காரணம் குறித்து கடிதம் மூலம் தாசில்தாருக்கு தெரியப்படுத்தினர்.

கொங்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் சங்க தலைவர் சங்கமேஸ்வரன் தலைமையில் போனஸ் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இது குறித்து சங்கமேஸ்வரன் கூறுகையில், நூல்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல காரணங்களால் தொழில் நடத்துவதே பெரும் சிரமமாக உள்ளது. தொழிற்சங்கத்தினர் 20 சதவீதம் போனஸ் கேட்டனர். இது குறித்து செயற்குழு கூட்டி முடிவெடுத்து சொல்கிறோம் என்று கூறி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொழிசங்க நிர்வாகி சுப்பிரமணி கூறுகையில், ஜவுளி உற்பத்தியாளர்கள் செயற்குழு கூட்டம் கூட்டி முடிவு சொல்வதாக கூறினார்கள். இது எங்களுக்கு உடன்பாடில்லை. தாசில்தாரை சந்தித்து இது பற்றி பேசினோம். இரண்டாம் கட்டமாக முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தாசில்தார் ஏற்பாடு செய்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 6 Feb 2023 3:30 PM GMT

Related News

Latest News

  1. கரூர்
    கரூரில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; மக்கள் அவதி
  2. கல்வி
    employment training workshop-JKKN ஸ்ரீ சக்திமயில் செவிலியர் மற்றும்...
  3. கரூர்
    பள்ளிக் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்துக்கு ரூ. 1 கோடி...
  4. தூத்துக்குடி
    அண்ணன் பாணியில் தங்கை: சாலையோர கடையில் தேநீர் அருந்தினார் கனிமொழி...
  5. கரூர்
    கரூர் மாவட்ட க்ரைம் செய்திகள்
  6. லைஃப்ஸ்டைல்
    வாழை இலையில ரசம் செஞ்சு இருக்கீங்களா...... அட அட ஊரே மணக்கும்
  7. கல்வி
    students conference -JKKN பொறியியல் கல்லூரியில் மாணவர் தலைமையிலான...
  8. பேராவூரணி
    பேராவூரணி அருகே கடை வைத்து 5 ரூபாய்க்கு தேனீர் விற்கும் முன்னாள்...
  9. சினிமா
    வந்தியத்தேவனாக கமல், குந்தவையாக ஸ்ரீதேவி - முன்னாள் முதல்வரின் ஆசை
  10. லைஃப்ஸ்டைல்
    143 meaning in tamil-143 என்பது எதை குறிக்கிறது..? இளைஞர்களின் கனவு...