/* */

குமாரபாளையம் சாலையில் பள்ளம்: மண் போட்டு நிரப்பி கடமை உணர்வை காட்டிய நகராட்சி அதிகாரிகள்

Namakkal District News -குமாரபாளையத்தில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பள்ளத்தை நகராட்சி ஊழியர்கள் ஒப்புக்கு மண் கொட்டி மூடி கடமையாற்றினர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் சாலையில் பள்ளம்: மண் போட்டு நிரப்பி கடமை உணர்வை காட்டிய நகராட்சி அதிகாரிகள்
X

குமாரபாளையம் இடைப்பாடி சாலை, நூலகம் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த பெரிய பள்ளத்தை மண் கொட்டி நிரப்பிய நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள்.

Namakkal District News - நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் இடைப்பாடி சாலை, நூலகம் அருகே பெரிய அளவிலான பள்ளம் சாலையில் இருந்தது. இதனால் அவ்வழியே தினமும் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

இந்த பள்ளம் காரணமாக வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பலமுறை கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இதனால், காலை, மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர்.இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பி புகார் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, புகாரின்படி சாலையில் பள்ளம் ஏற்பட்ட இடத்தை நேரில் குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து நகராட்சி ஊழியர்களை கொண்டு சாலையில் ஏற்பட்டு இருந்த பெரிய பள்ளத்தில் மண் கொட்டி சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட அப்பகுதி பொதுமக்கள், குமாரபாளையம் நகராட்சி அதிகாரிகள், ஊழியர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.மேலும், இதுபோன்ற பள்ளங்களை மண் போட்டு நிரப்புவது தற்காலிக நடவடிக்கையாகத்தான் இருக்கும். மழை பெய்தாலும், காற்றுக்கும் பள்ளத்தில் போட்டு மூடிய மண் அடித்துச்செல்லப்படும். அதனால் ஜல்லி, தார் போட்டு சீரமைப்பதே நிரந்தர தீர்வாக அமையும்.

எனவே, கண் துடைப்புக்கு நடவைடிக்கை எடுக்காமல், நகராட்சி அதிகாரிகள் நிரந்தர தீர்வை ஏற்படுத்தினால் தான் பொதுமக்கள் பிரச்னை முடிவுக்கு வரும். இதுகூட தெரியாமல் நகராட்சி அதிகாரிகள், பொறியாளர்கள் இருப்பது வேதனை அளிக்கிறது. தற்காலிக தீர்வுக்காக மண் போட்டு மூடி, பண விரயமும், காலமும் செலவழிப்பது அதிகாரிகளின் அறியாமையா? சுயநல நோக்கமா? என, சமூக ஆர்வலர்கள் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளனர்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2




Updated On: 8 Jun 2022 10:12 AM GMT

Related News