/* */

கடும் கோடை வெப்பத்தால் அவதிப்படும் பொதுமக்கள்

குமாரபாளையத்தில் கடும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

HIGHLIGHTS

கடும் கோடை வெப்பத்தால் அவதிப்படும் பொதுமக்கள்
X

குமாரபாளையத்தில் கடும் கோடை வெப்பத்தால் மக்கள் நடமாட்டம் மிக குறைந்து காணப்படும் சேலம் சாலை

குமாரபாளையத்தில் கடும் கோடை வெப்பத்தால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

குமாரபாளையத்தில் கடும் கோடை வெப்பத்தால் பெரியவர்கள், குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நடைபாதை கடையினர் கோடை வெப்பத்திலும் தங்கள் வியாபாரத்தை கவனித்து வருகின்றனர். குறிப்பாக மதியம் 11மணிமுதல் மாலை 05மணி வரை ஆள்நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. இதனால் வியாபாரம் மிகவும் பாதித்து வருவதாகவும் வியாபாரிகள் கூறி வருகிறார்கள். விசைத்தறி கூடங்களில் பெரும்பாலும் சிமெண்ட் அட்டை போடப்பட்டு இருப்பதால், தொழிலாளர்கள் வெப்பத்தை தாங்கிக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள். மொத்தத்தில் சித்திரை நெருங்கும் போது சூரியன் சுட்டெரிக்கிறது என்பதே உண்மை.

வெயிலின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்வது எப்படி: கொளுத்தும் வெயிலில் கால் நன்கு தெரியும் படியான காலணிகளை தவிர்ப்பது நல்லது. வெயில் சூடு படாமல் பாதங்களை பராமரிப்பதும் அவசியம். எனவே ஷூ, செப்பல் அணிவது சௌகரியமாக இருக்கும்.

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்ப நிலை மக்களை வெளியே செல்லவே பயமுறுத்துகிறது. வெயில்தான் இப்படி வாட்டுகிறது என்கிற புலம்பல்களும் கேட்க முடிகிறது. குறிப்பாக 40 வயதைக் கடந்த பலருக்கும் இந்த வெப்ப நிலையின் தாக்கம் கடுமையான பாதிப்புகளை உண்டாக்குகிறது.

ஆனாலும் இந்த வெயிலை பார்த்தால் வேலை ஆகுமா என்பதுபோல், என்னதான் வெயில் ஒரு பக்கம் அடித்தாலும் நம் வேலைக்காக வெளியே சென்றுதான் ஆக வேண்டும். அப்படி வேலை காரணமாக வெளியே செல்கிறீர்கள் எனில் வெயில் தாக்கத்திலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்ள இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள். இதனால் கொஞ்சமேனும் தப்பிக்கலாம்.

வெளியே செல்வதாக இருந்தால் மறக்காமல் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லுங்கள். பாட்டிலில் நேரடியாக சூரிய வெளிச்சம் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதை முடிந்தால் துணியால் சுற்றி பையில் வைத்துக் கொள்ளுங்கள். வெயிலிலிருந்து உங்களை தற்காத்துக்கொள்ள தண்ணீரை விட சிறந்தது வேறெதுவும் இருக்க முடியாது.

வெளியே சென்றால் சூடான டீ, காபி மற்றும் கார்போஹைட்ரேட் பானங்களை தவிர்த்துவிடுவது நல்லது. பாட்டில் பானங்கள் அந்த நேரத்தில் குடிக்க குளுர்ச்சியாக , தொண்டைக்கு இதமாக இருக்கலாம். ஆனால் அவைதான் உங்களுக்கு தீவிர உடல் நீரிழப்பை உண்டாக்கவும் காரணமாக இருக்கும். வயிறு தொந்தரவுகளை உண்டாக்கும். எனவே இவற்றிற்கு பதிலாக தண்ணீர், எலுமிச்சை தண்ணீர், மோர், பழச்சாறு போன்றவை குடியுங்கள்.

கடின செயல்பாடுகளை தவிர்க்கவும்: வெயிலில் சும்மா நின்றாலே நம்முடைய ஆற்றலை உறிஞ்சி விடும். நீங்கள் சுற்றித் திரிந்து அலைந்து கடுமையான வேலைகளை செய்கிறீர்கள் எனில் நிச்சயம் அதன் பக்க விளைவுகளை அனுபவிக்கக் கூடும். அப்படி வேலை செய்தே ஆக வேண்டும் எனில் அடிக்கடி ஓய்வு எடுங்கள். நிறைய தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள். ஏனெனில் தண்ணீரில் இருக்கும் மினரல் சத்துகள்தான் உங்களுக்கு குறையும் ஆற்றலை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

கோடைக்கு நன்கு காற்றோட்டமான ஆடைகளை உடுத்துவது அவசியம். குறிப்பாக காட்டன் ஃபேப்ரிக் உடைகளை அணிவது சிறந்தது. இறுக்கமாக அல்லாமல் லூஸாக அணிவது நல்லது. அதேபோல் அணியும் உடையின் நிறமும் அவசியம். நிறம் அடர்த்தியான உடைகள் வெயிலை உறிஞ்சி உடலில் எளிதில் கடத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. எனவே பளீர் நிற உடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது குடை, தொப்பி, டவல் இவற்றையும் கொண்டு செல்லுங்கள்.

கால் நன்கு தெரியும் படியான காலணிகளை தவிர்ப்பது நல்லது. வெயில் சூடு படாமல் பாதங்களை பராமரிப்பதும் அவசியம். எனவே ஷூ, செப்பல் அணிவது சௌகரியமாக இருக்கும். வெளியே சென்றால் கட்டாயம் சன் ஸ்கிரீன் கிரீம் அப்ளை செய்யுங்கள் சரும நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே முகத்திற்கு மட்டுமல்லாமல் கை,கால் என வெளியில் தெரியக் கூடிய அனைத்து இடங்களிலும் சன் ஸ்கிரீன் கிரீம் அப்ளை செய்யுங்கள். இதுதான் புறஊதா கதிர்கள் நேரடியாக சருமத்தில் படுவதை தவிர்க்க உதவுகிறது.

வெயில் காலத்தில் ஜீரண சக்தி வேகமாக இருக்காது. குறிப்பாக சாப்பிடவும் பிடிக்காது. சாப்பிட்ட உணவு எப்போதும் மந்தமாகவே இருக்கும். அடிக்கடி தண்ணீர்தான் குடிக்கக் தோன்றும். எனவே இதுபோன்ற நேரத்தில் அதிக மசாலா, நீண்ட நேரம் ஜீரணிக்கும் உணவுகளை தவிர்த்துவிடுங்கள்.அதேபோல் அளவுக்கு அதிகமாக இல்லாமல் குறைவாக சாப்பிடுங்கள். ஏனெனில் உடல் செரிமானத்திற்காக அனைத்து ஆற்றலையும் எடுத்துக்கொண்டால் உடலில் எனர்ஜி சீக்கிரம் இறங்கிவிடும். வெளியே செல்லும்போது வெயில் ஒரு பக்கம் உங்கள் எனர்ஜியை உறிஞ்சிவிடும். எனவே கோடையை பாதுகாப்புடன் கடந்து செல்ல வேண்டும்.


Updated On: 6 April 2023 6:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப பயன்பாடு இரட்டிப்பு வளர்ச்சி..!
  2. தொழில்நுட்பம்
    சூரியனில் ஏற்பட்ட மாபெரும் வெடிப்பை படம் பிடித்த நாசா
  3. ஈரோடு
    ஈரோட்டில் ஸ்வீட் கடையில் கஞ்சா சாக்லேட் விற்ற முதியவர் கைது
  4. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  5. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  6. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  7. திருவண்ணாமலை
    விபத்தில் சிக்கியது அமைச்சர் எ.வ. வேலுவின் மகன் கம்பன் சென்ற கார்
  8. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  9. க்ரைம்
    பிரபல யூடியுபர் சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
  10. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!