/* */

குமாரபாளையம் பஸ் நிலையம் வராமல் செல்லும் பஸ்களால் பயணிகள் அவதி

குமாரபாளையம் பஸ் நிலையம் வராமல் செல்லும் பஸ்களால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

குமாரபாளையம் பஸ் நிலையம் வராமல் செல்லும் பஸ்களால் பயணிகள் அவதி
X

குமாரபாளையம் பஸ் நிலையம் வராமல்  பள்ளிபாளையம் பிரிவுசாலையில் திரும்பி சென்ற இரு தனியார் பஸ்கள். 

பஸ் நிலையம் வராத பஸ்கள்

பவானியில் இருந்து சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் குமாரபாளையம் பஸ் நிலையம் வந்து பயணிகளை ஏற்றி செல்வார்கள். ஆனால் சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து குமாரபாளையம் வரும் பஸ்கள் பெரும்பாலும் குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் சென்று பயணிகளை இறக்கி விடாமல், ஒரு கி.மீ.க்கு முன்னால் உள்ள பள்ளிபாளையம் பிரிவு சாலையில் இறக்கி விட்டு விட்டு செல்வதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். நேற்று காலை 08:50 மணியளவில் இரண்டு தனியார் பஸ்களும் போட்டி போட்டுக்கொண்டு, குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் போகாமல் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் திரும்பினர். போட்டி போட்டுக்கொண்டு பஸ்களை குறுக்கே சில வினாடிகள் நிறுத்தி, அதன்பின் சிறிது தூரம் சென்று நடுவழியில் பஸ்ஸை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டனர். இரு பஸ் ஓட்டுனர்களும் முகப்பு விளக்குகளை போட்டவாறும், ஹாரன் அடித்தவாறும் சாலையில் செல்லும் பொதுமக்கள் அலறி ஓடும் வகையில் சென்றனர்.

இது பற்றி மக்கள் நீதி மய்யம் மகளிரணி செயலர் சித்ரா கூறியதாவது:-குமாரபாளையம் பஸ் நிலையம் வராத, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஓட்டுகின்ற இது போன்ற தனியார் பஸ் ஓட்டுனர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இரவு நேர பஸ்கள்

குமாரபாளையம் பகுதியில் பெரும்பாலான தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றி இரவு வீட்டிற்கு திரும்ப இரவு 9 மணிக்கும் மேல் ஆகிறது. அப்போது குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்தால் 3 அரசு டவுன் பஸ்கள் ஒரே நேரத்தில் வருகிறது. பயணிகள் ஏற முயற்சித்தால் பஸ்கள் டெப்போவிற்கு போகிறது, யாரும் ஏறாதீர்கள் என்று கூறிவிட்டு பஸ்களை எடுத்து சென்று விடுகிறார்கள். இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடுதல் பஸ்கள் வேண்டும்

குமாரபாளையத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் ஆனங்கூர் வழியில் வெப்படை, உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவியர், விசைத்தறி, கைத்தறி, சாயப்பட்டறை உள்ளிட்ட தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள், மருத்துவ மனைகளுக்கு வரும் நோயாளிகள் என பல தரப்பினர் குமாரபாளையம் வருகின்றனர். பள்ளி, கல்லூரி, மற்றும் இதர பணிகளுக்கு வரும் நபர்கள் திருச்செங்கோடு செல்லும் 8 எண் கொண்ட டவுன் பஸ் பயன்படுத்தி வருகின்றனர். ஓரிரு பஸ் மட்டும் இருப்பதால் அதிக கூட்டம் ஏறி வருகின்றனர். இதனால் விபத்து அபாயம், நோய் தொற்று ஏற்பட காரணமாக அமைத்துள்ளது. ஆகவே இவ்வழியே அதிக பஸ்கள் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மார்க்கெட் கட்ட வேண்டும்

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இரண்டு பக்கமாக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 40 க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. இடைப்பாடி பஸ்கள் நிற்கும் பகுதியில் தற்காலிக தினசரி காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. சேலம் பஸ்கள் நிற்கும் பகுதியில் இடைப்பாடி, பள்ளிபாளையம், ஈரோடு, திருச்செங்கோடு, பழனி, சென்னை, மற்றும் மினி பஸ்கள் ஆகியன நிறுத்தி வைக்கப்படுகின்றன.

இரு பக்க கடைகளை மறைத்தவாறு ஒருபுறம் காய்கறி கடைகளும், மறுபுறம் அனைத்து ஊர்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் பஸ் ஸ்டாண்ட் கடையினர் அதிருப்தியடைந்து வருகின்றனர். காய்கறி மார்க்கெட் கட்டுமான பணியை விரைந்து முடிக்க பஸ் ஸ்டாண்ட் கடையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் சேலம், ஈரோடு, திருச்செங்கோடு, பழனி, சென்னை செல்லும் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்வது வழக்கம். தற்போது பஸ் ஸ்டாண்ட் ஒரு பகுதியில் தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இதனால் இடைப்பாடி செல்லும் பஸ்கள், சேலம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் வந்து நிற்கும் இடத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது. இதனால் இட நெருக்கடி அதிகம் உள்ள நிலையில், அதிக அளவிலான டூவீலர்கள் இந்த பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று சேலம் சாலைக்கு சென்று வருகின்றன. இதனால் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் பஸ் விட்டு இறங்க கூட முடியாத நிலை ஏற்படுகிறது. சில சமயங்களில் பஸ் விட்டு இறங்கும் போது வேகமாக வரும் டூவீலர் ஓட்டுனர்கள் பயணிகள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். பஸ் ஸ்டாண்டிற்குள் டூவீலர் வருவதை தடுக்க போலீசார், நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெம்போக்களில் பயணிகள்

மினி டெம்போவில் அதிக ஆட்களை ஏற்றி செல்வதால் பாரம் தாங்காமல் பல இடங்களில் வேன் கவிழ்த்து விபத்து ஏற்பட்டு பலரும் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள். இதனால் பலமுறை போலீசார் எச்சரித்தும் தொடர்ந்து ஆட்களை ஏற்றி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நேற்று மினி டெம்போவை நிறுத்தி அதில் அதிக ஆட்களை ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதனால் ஆட்டோ ஓட்டுனர்களும் தங்களுக்கு இதனால் வருமானமிழப்பு ஏற்படுவதாக புகார் கூறினார்கள். இது குறித்து போலீசார் மினி டெம்போ ஓட்டுனர்களிடம் எச்சரிக்கை விடுக்க வேண்டும்.

Updated On: 20 Oct 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தமிழக கிராம உணவின் சிறப்புகள்
  2. குமாரபாளையம்
    மழை வேண்டி மழைக்கஞ்சி வழங்க பாட்டுப்பாடி அரிசி தானம் பெற்ற பொதுமக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் வலிகூட நமக்கான பாடம்தான்..! கற்றுக்கொள்வோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    மூளையை சுறுசுறுப்பாக்குங்கள்: புத்திசாலித்தனமாக செயல்பட 10 வழிகள்
  5. லைஃப்ஸ்டைல்
    இனிய உறவாக தோழனின் தோள் பாதுகாக்கும்..!
  6. இந்தியா
    5ஜி நெட்வொர்க் ஏஐ பயன்பாட்டில் தானியங்கி சேவை: சி-டாட், ஜோத்பூர் ஐஐடி...
  7. கடையநல்லூர்
    கேரளாவில் பறவை காய்ச்சல்: தமிழக-கேரள எல்லையில் மாவட்ட ஆட்சியர்...
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் கூந்தலுக்கு 'கவசம்'
  9. லைஃப்ஸ்டைல்
    இளம் பெண்களே..உங்கள் சருமம் அழகாக இருக்கணுமா? அவசியம் படீங்க..!
  10. தென்காசி
    கள்ள நோட்டு வழக்கில் 6 நபருக்கு 7 ஆண்டு கடுங்காவல்: நீதிமன்றம் அதிரடி