/* */

குமாரபாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் கும்பாபிஷேக விழா
X

குமாரபாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் ஜண்டை மேளங்களுடன் நடைபெற்றது. கும்பாபிஷேக விழா நேற்று காலை 08:00 மணியளவில் நடைபெற்றது. லோகானந் சாஸ்திரிகள் குழுவினர் யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேக விழாவை நடத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

எல்லை மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் எல்லை மாரியம்மன், பண்ணாரி மாரியம்மன் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் அம்மன் நகர் எல்லை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நவ. 26ல் முகூர்த்தக்கால் நடுதலுடன் துவங்கியது. நேற்று காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் யானை, குதிரை, ஒட்டகம், ஜண்டை மேளங்களுடன் நடைபெற்றது.

காட்டூர், பண்ணாரி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று கணபதி பூஜையுடன் துவங்கியது. நேற்று காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் ஜண்டை மேளங்களுடன் நடைபெற்றது.

காட்டேரி அம்மன் கும்பாபிஷேக விழா

குமாரபாளையத்தில் காட்டேரி அம்மன் கும்பாபிஷேக விழாவையொட்டி யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

குமாரபாளையத்தில் காட்டேரி அம்மன் கும்பாபிஷேக விழா கணபதி பூஜையுடன் துவங்கியது. காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குடங்கள் மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. யாக சாலை பூஜைகள் பழனி மனோகரசிவம் உள்ளிட்ட சிவாச்சாரியார்களால் நடத்தப்பட்டன. கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று காலை 09:30 மணியளவில் கோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது. பல ஊர்களிலிருந்து பக்தர்கள் பெருமளவில் பங்கேற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சக்தி மாரியம்மன் கோயில் 16ம் ஆண்டு துவக்க விழா, 108 சங்காபிஷேக விழா

குமாரபாளையத்தில் சக்தி மாரியம்மன் கோயில் 16ம் ஆண்டு துவக்க விழா, 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது.

குமாரபாளையம் சுந்தரம் நகர் அருகே காளியண்ணன் நகர் சித்தி விநாயகர் மற்றும் சக்தி மாரியம்மன் கோயில் 16ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை நடைபெற்றது. மேலும் சிறப்பு யாக பூஜைகள், 108 சங்காபிஷேக பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமை நாளையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சுவாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாமோதரசுவாமி கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வேடமணிந்த குழந்தைகள்

குமாரபாளையம் சவுண்டம்மன் கோவிலில் அம்மன் வேடமணிந்த குழந்தைகள் ஊர்வலம் நடைபெற்றது.

குமாரபாளையம் சேலம் சாலை சவுண்டம்மன் கோவிலில் அம்மனுக்கு அலங்கார வழிபாடு நடைபெற்றது. மேலும் குழந்தைகளுக்கு அம்மன் வேடமிட்டு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு, குழந்தைகளுடன் அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக வந்த திருவீதி உலா கோவிலில் நிறைவு பெற்றது. கோவிலில் பக்தர்கள் பக்தி பாடல்கள் பாட குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 4 Dec 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. சேலம்
    மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு 1,500 கன அடியாக அதிகரிப்பு
  5. ஈரோடு
    பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 44 அடியாக சரிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. கலசப்பாக்கம்
    கலசப்பாக்கத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு
  10. கோவை மாநகர்
    கோவை நகரில் நள்ளிரவு பெய்த மிதமான மழை: மின்னல் தாக்கி தீப்பிடித்த...