/* */

பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகளுக்கு 'சபாஷ்' :மயானம் சுத்தம் செய்யும் பணி தீவிரம்

பள்ளிபாளையம் மயானம் சுத்தம் செய்யும் பணியில் நகராட்சி அதிகாரிகள் தீவிர நடவடிக்கையை மேற்கொள்ளப்டுள்ளனர்.

HIGHLIGHTS

பள்ளிபாளையம் நகராட்சி அதிகாரிகளுக்கு சபாஷ் :மயானம் சுத்தம் செய்யும் பணி  தீவிரம்
X

நாமக்கல் மாவட்டம்,பள்ளிபாளையம் மயானத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளர்கள்.

பள்ளிபாளையம் நகராட்சி, சொர்க்கபூமி மயானத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக உள்ளனர்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட காவிரி பாலத்தின் அருகே அமைந்துள்ள சொர்க்கபூமி மயானத்திற்குள் பொதுமக்கள் பயன்படுத்தும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் தொடர்ச்சியாக கொட்டி வருகின்றனர். இதனால், சுகாதார சீர்கேடும் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக சமூக வலை தளங்களில் செய்தி வெளியானது.

இதனை அடுத்து பள்ளிபாளையம் நகராட்சிக்கு இந்த விவகாரம் கொண்டு செல்லப்பட்டது. நகராட்சி அதிகாரிகள் இதற்கு அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதிகாரிகள் முன்னிலையில் கடந்த இரண்டு நாட்களாக 3 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு குப்பைகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தி எதிரொலியாக இந்த பணிகள் நடந்து வருவது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் பள்ளிப்பாளையம் வட்டார பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Updated On: 26 April 2021 8:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உண்மை உறவுகளுக்குள் ஊடலும் இருக்கும்..!?
  2. கல்வி
    பெறும் முன்னரே சுதந்திர பள்ளு பாடிய உணர்ச்சிக்கவி பாரதி..!
  3. டாக்டர் சார்
    பெண்களின் இனப்பெருக்க குறைபாடுகள் என்னென்ன..? எப்படி தவிர்க்கலாம்..?
  4. இந்தியா
    பெங்களூர் வாசிங்களே...மோடியால இன்னிக்கு வரலாறு காணாத டிராபிக்......
  5. திருப்பரங்குன்றம்
    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், நாளை திருக்கல்யாணம்..!
  6. இந்தியா
    'இந்தியாவின் எஃகு சட்டகம்' என்பவர் யார் தெரியுமா?
  7. இந்தியா
    கர்நாடக மாணவி கொலை...! என்னதான் ஆச்சு!
  8. லைஃப்ஸ்டைல்
    கோடை வெப்பத்தை சமாளிக்க 5 பானங்கள்
  9. உலகம்
    இவ்ளோ நாள் கொரோனாவுடன் வாழ்ந்தாரா..? ஆச்சர்ய மனிதர்..!
  10. கவுண்டம்பாளையம்
    கோவையில் இரண்டாவது முறை வாக்களிக்க முயன்றவர் கைது