ஒரு நபருக்கு ஒரு பாட்டில்: டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தல்
குமாரபாளையம் டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு ஒரு பாட்டில் மட்டும் வழங்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்
HIGHLIGHTS

குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
குமாரபாளையம் டாஸ்மாக் கடைகளில் ஒரு நபருக்கு ஒரு பாட்டில் மட்டும் வழங்க வேண்டும் என போலீசார் டாஸ்மாக் கண்காணிப்பாளர்களிடம் அறிவுறுத்தினார்.
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் டாஸ்மாக் பார் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்த நிலையில், டாஸ்மாக் கண்காணிப்பாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.இதில் இன்ஸ்பெக்டர் தவமணி பேசியதாவது:
டாஸ்மாக் பார்கள் அரசு குறிப்பிட்டுள்ள நேரத்தில் துவங்கி, அரசு நிர்ணயம் செய்த நேரத்தில் முடித்து விடவேண்டும். விதிமீறி செயல்படும் பார்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வித விதி மீறலும் இருக்க கூடாது. மேலும் ஒரு நபருக்கு ஒரு பாட்டில் மட்டும்தான் வழங்க வேண்டும். அதிகமாக வாங்கி அவன் விற்க முயற்சி செய்கிறான். பலரும் இது போல் செய்வதால் பல புகார்கள் வந்துள்ளன. அரசு அனுமதியுடன் டாஸ்மாக் கடையுடன் பார்கள் செயல்பட்டு வருகின்றன.
இவைகளில் மது விற்பனை செய்வது கூடாது. விதி மீறி செயல்பட்டால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ரோந்து பணியின் போது பல இடங்களில் டாஸ்மாக் மது வகைகள் விதி மீறி விற்பது தெரிய வருகிறது. அவ்வாறு பிடிபடும் போது, எந்த கடையில் அதிகமாக மது பாட்டில்கள் வாங்கி வந்ததாக தெரிய வருகிறதோ, அந்த கடை விற்பனையாளர், கண்காணிப்பாளர் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.