/* */

குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்கள் யோகா சிறப்பு முகாம்

குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்கள் யோகா சிறப்பு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்கள் யோகா சிறப்பு முகாம்
X

குமாரபாளையத்தில் என்.சி.சி. மாணவர்கள் யோகா சிறப்பு முகாம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது.

குமாரபாளையத்தில் 15வது பட்டாலியன் என்.சி.சி. சார்பில் கமாண்டிங் அலுவலர் அணில்வர்மா, நிர்வாக அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதலில் உலக யோகா தினத்தையொட்டி என்.சி.சி. மாணவர்கள் யோகா சிறப்பு முகாம் அரசு உதவி பெறும் எஸ்.எஸ்.எம். பாலிடெக்னிக் கல்லூரியில் கல்லூரி தலைவர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.

நிர்வாகிகள் ஈஸ்வர், புருஷோத்தமன் , கல்லூரி முதல்வர் பாலமுருகன் வாழ்த்தி பேசினார்கள். அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ, மாணவியர்கள் 220 பேர் பங்கேற்றனர். என்.சி.சி. அலுவலர்கள் அந்தோணிசாமி, பிரபுதாஸ், முருகேஸ்வரி, சிவகுமார், ரமேஷ்குமார், கோகுலகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

உலக சமாதான ஆலயம் சார்பில் 10 நாட்கள் இலவச யோகாசன முகாம் நேற்று துவங்கியது. இன்ஸ்பெக்டர் ரவி துவக்கி வைத்தார். எஸ்.ஐ. மலர்விழி குத்துவிளக்கேற்றினார். தொழிலதிபர்கள் இளங்கோ, சிவக்குமார் உள்பட வாழ்த்தி பேசினர். காலை ஆண்களுக்கும், மாலை பெண்களுக்கும் யோகா பயிற்சி நடைபெறவுள்ளது.

அரசு பி.எட்.கல்லூரியில் யோகா தினத்தையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது. யோகா தினத்தையொட்டி நீதிபதிகள், வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள் யோகா நீதிமன்ற வளாகத்தில் யோகா பயிற்சி செய்தனர்.

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் யோகா பயிற்சி முகாம் தலைமை ஆசிரியை கவுசல்யாமணி தலைமையில் நடைபெற்றது.

Updated On: 21 Jun 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    வாக்குப்பதிவு மையங்களில் நேரில் ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்
  2. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 78.16 சதவீத வாக்குப்பதிவு: முழு விபரம்...
  3. திருவண்ணாமலை
    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்...
  4. ஆரணி
    ஆரணி நாடாளுமன்ற தொகுதியில் 73.77 சதவீத வாக்குப்பதிவு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் 73.35 சதவீத வாக்குப்பதிவு
  6. லைஃப்ஸ்டைல்
    தேநீர் தியானம்: ஜப்பானின் அமைதிக்கான ரகசியம்
  7. சுற்றுலா
    அந்தமான் நிக்கோபார் சொர்க்கத்தின் எல்லை!
  8. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி தொகுதியில் 71.07 சதவீத வாக்குகள் பதிவு
  9. கோவை மாநகர்
    கோவை தொகுதியில் 64.42 சதவீதம் வாக்குப்பதிவு
  10. சுற்றுலா
    இராமேஸ்வரத்தின் ஆன்மீகத்தின் முக்கிய ஸ்தலம்!