Begin typing your search above and press return to search.
குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு, நாடி சிகிச்சை ஆலோசனை
குமாரபாளையத்தில் இயற்கை மருத்துவ சொற்பொழிவு மற்றும் நாடி பார்த்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
HIGHLIGHTS

குமாரபாளையத்தில் கோவை இயற்கை மற்றும் யோகா மையம் சார்பில் தலைமை டாக்டர் நிவேதா நாடி பார்த்து மருத்துவ ஆலோசனை வழங்கினார்.
குமாரபாளையத்தில் நரேந்திரன் பொதுநல அமைப்பின் சார்பில் மாதம் தோறும் ஆன்மீக சொற்பொழிவுகள் உள்ளிட்ட பல துறை ஆய்வர்களின் இலவச கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு 07:00 மணியளவில் கோவை இயற்கை மற்றும் யோகா மையம் சார்பில் தலைமை டாக்டர் நிவேதா நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
இதையடுத்து பொதுமக்களின் நாடி பார்த்து மருத்துவ ஆலோசனைகள் வழங்கினார். குமாரபாளையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.