/* */

குமாரபாளையம் அமானி கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி

குமாரபாளையம் அமானி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது.

HIGHLIGHTS

குமாரபாளையம் அமானி கிராமத்தில் இயற்கை வேளாண்மை பயிற்சி
X

குமாரபாளையம் அமானி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது.

பள்ளிபாளையம் வட்டாரம், குமாரபாளையம் அமானி கிராமத்தில் அட்மா திட்டத்தின் கீழ் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர்சி.கலைச்செல்வி தலைமை வகித்தார். அவர் வேளாண்மை உழவர் நலத்துறையின் மானியத் திட்டங்களான உயிர் உரங்கள், நுண்ணூட்டங்கள், இராகி விதை, உளுந்து விதை ஆகியவை மானிய விலையில் பள்ளிபாளையம், வெப்படை, குமாரபாளையம் ஆகிய வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும் என்பது குறித்து விளக்கினார்.

இதனையடுத்து வேளாண்மை அலுவலர் (பொ) செளந்தர்ராஜன், அசேஸ்பைரில்லம், பஸ்போபாக்டீரியா, ரைசோபியம், டிவிரிடி, சூடோமோனஸ் ஆகியவற்றை கொண்டு மண் வளத்தினை மேம்படுத்துவது குறித்து பேசினார்.

முன்னோடி விவசாயி யுவராஜ், அங்கக வேளாண்மையின் முக்கியத்துவம், அங்கக வேளாண்மைக்கான இடுபொருட்களான பஞ்சகாவ்யா, ஜீவாமிர்தம், மீன் அமினோ அமிலம், EM கரைசல், ஆகியவற்றை நெல், கரும்பு பயிர்களுக்கு பயன்படுத்தும் அளவுகள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து பேசினார்.

இப்பயிற்சிக்கு தேவையான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் காமேஷ் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரியங்கா ஆகியோர் செய்திருந்தனர்.

Updated On: 19 Dec 2021 7:16 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்
  5. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  6. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  7. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  8. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  9. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?