/* */

நாமக்கல் மாவட்ட தி.மு.க.செயலாளரை வரவேற்க குமாரபாளையத்தில் ஏற்பாடு

குமாரபாளையத்தில் நாமக்கல் மாவட்ட செயலாளரை வரவேற்க இரவு பகலாக அலங்கார ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

நாமக்கல் மாவட்ட தி.மு.க.செயலாளரை  வரவேற்க குமாரபாளையத்தில் ஏற்பாடு
X

குமாரபாளையத்தில் தி.மு.க. மாவட்ட செயலாளர் மதுரா செந்திலை வரவேற்க கொடி அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

தி.மு.க.வின் பதினைந்தாவது உள் கட்சி தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின்படி நாமக்கல் மாவட்ட தி மு க. செயலாளராக மதுரா செந்தில் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மாவட்ட செயலாளராக தேர்வான பின்னர் மதுரா செந்தில் முதன் முதலாக குமாரபாளையம் வருகிறார்.

இவரை வரவேற்க தி.மு.க. நகர செயலாளர் செல்வம் தலைமையில் ஒரு அணியினரும், நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் தலைமையில் ஒரு அணியினரும் கத்தேரி பிரிவு முதல், காவேரி பழைய பாலம் வரை சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு இரு புறமும், நூற்றுக்கணக்கான தி.மு.க. கொடிக்கம்பங்கள், பிளெக்ஸ் பேனர்கள், என அலங்கரித்து வருகின்றனர். பள்ளிபாளையம் பிரிவு சாலையில் வரவேற்பு வழங்க மேடையும் போடப்பட்டு உள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க இருப்பதால், அந்த சாலை முழுதும் கொடி, தோரணங்கள் அலங்காரம் பிரமிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

Updated On: 2 Oct 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  2. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  3. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  5. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  6. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. கல்வி
    மதங்களை கடந்த மாமனிதர், கலாம் ஐயா..!
  9. திருச்சிராப்பள்ளி
    முன்னாள் சார்பதிவாளரின் ரூ.100 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்ய
  10. லைஃப்ஸ்டைல்
    சுயநலத்தால் நம்பகத்தன்மை இழந்த உலகில், உறவுகளில் யாரையுமே நம்பாதே!