/* */

தேசிய யோகா போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நிதி வழங்கிய நகராட்சி தலைவர்

தேசிய யோகா போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு குமாரபாளையம் நகராட்சி தலைவர் நிதி வழங்கி உதவினார்.

HIGHLIGHTS

தேசிய யோகா போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நிதி வழங்கிய நகராட்சி தலைவர்
X

தேசிய யோகா போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு நிதி வழங்கிய  குமாரபாளையம் நகராட்சி தலைவர்

தேசிய யோகா போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு குமாரபாளையம் நகராட்சி தலைவர் நிதி வழங்கி உதவினார்.

குமாரபாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் ருத்ரன், மவுலிதரன் இருவரும் மே 19 முதல் 22 வரை, ஜம்முவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான யோகா போட்டியில் பங்கேற்க உள்ளனர். இவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக இதில் பங்கேற்பது கேள்விக்குறியாக இருந்தது.

இது பற்றி தகவலறிந்த குமாரபாளையம் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், யோகா போட்டியில் பங்கேற்கவிருக்கும் மாணவர்களுக்கு 10 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். யோகா பயிற்சியாளர் பிரபு, நிர்வாகிகள் ஐயப்பன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

மேலும், குமாரபாளையம் சின்னப்பநாயக்கன் பாளையம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி தமிழ் வழி கல்வியில் 8-ஆம் வகுப்பு படித்து வரும் லோகிதா என்னும் மாணவி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றார். பள்ளியின் சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் மாணவிக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினார்.

தேசிய திறனாய்வு போட்டியில் தேர்ச்சி பெற்ற மாணவிக்கு4 வருடத்திற்கு (9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை )மாதம் தலா ரூபாய் 1000 வீதம் மொத்தம் 48 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இந்நிகழ்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் கற்பகம், கவுன்சிலர் இனியா ராஜ், நிர்வாகிகள் செல்வராஜ், செந்தில்குமார், சரவணன், ஜூல்பிகார்அலி, பாலாஜி, பள்ளி மேலாண்மை குழு தலைவர் கோகிலா மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர் பெருமக்கள், மாணவ மாணவிகள் பெருமளவில் பங்கேற்றனர்.



Updated On: 18 May 2023 2:42 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் வணங்கும் நேர் கண்ட தெய்வம், அப்பா..!
  2. கோவை மாநகர்
    கோவையில் ஒரு இலட்சம் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து...
  3. நாமக்கல்
    நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் மாலை 5 மணி நிலவரம்: 71.44 சதவீதம்...
  4. கவுண்டம்பாளையம்
    கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக...
  5. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் காலைநேரத்து காபியும் ஒரு நம்பிக்கை விதையும்..!
  6. ஈரோடு
    ஈரோடு தொகுதியில் மாலை 5 மணி நிலவரப்படி 64.50 சதவீதம் வாக்குப்பதிவு
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில் மாலை 3 மணி நிலவரம்: 53.72 சதவீதம்
  8. லைஃப்ஸ்டைல்
    தோல்வியுறும்போதுதான் காதல்கூட வெற்றி பெறுகிறது..!
  9. லைஃப்ஸ்டைல்
    இரு விழிகள் எழுதும் ஒரு புதிய கவிதை, காதல்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மகளின் முதல் ஹீரோ, 'அப்பா'.!