/* */

17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கிய சேர்மன்

குமாரபாளையத்தில் உள்ள ஒரு கோவில் பயன்பாட்டிற்காக தனது சொந்த நிலத்தை நகராட்சி தலைவர் தானமாக வழங்கினார்.

HIGHLIGHTS

17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை கோவிலுக்கு தானமாக வழங்கிய சேர்மன்
X

குமாரபாளையத்தில் உள்ள ஒரு கோவில் பயன்பாட்டிற்காக தனது சொந்த செலவில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை சேர்மன் விஜய்கண்ண்ணன் தானமாக வழங்கினார்.

குமாரபாளையத்தில் உள்ள ஒரு கோவில் பயன்பாட்டிற்காக தனது சொந்த செலவில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை நகராட்சித்தலைவர் தானமாக வழங்கினார்.

குமாரபாளையம் 31 வது வார்டு பாரதி நகர் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவில் பயன்பாட்டிற்காக நிலம் வேண்டி, கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வாக்கு சேகரிக்க சென்றபோது, இன்றைய நகராட்சித்தலைவர் விஜய்கண்ணனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். வெற்றி பெற்றவுடன் உறுதியாக தனது சொந்த செலவில் நிலத்தை வாங்கி தருவதாக வாக்குறுதி அளித்தார்

அதன்படி தனது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தேவி கருமாரியம்மன் கோவிலுக்கு தனது சொந்த செலவில் 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிலத்தை, கோவில் பயன்பாட்டிற்காக வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் நகராட்சிச் தலைவர் விஜய்கண்ணன் பங்கேற்று, கோவில் நிலத்தை கோவில் நிர்வாகிகளிடம் ஒப்படைத்து, கல்வெட்டை திறந்து வைத்தார். இதில் கவுன்சிலர் ஜேம்ஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், வார்டு செயலாளர் செந்தில்குமார், ஆறுமுகம், நிர்வாகிகள் ஜுல்பிகர்அலி, சரவணன், கதிரேசன், பாலாஜி, அருண்குமார், கோவில் கமிட்டி நிர்வாகிகள், பகுதி பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

.குமாரபாளையம் வாரச்சந்தையை மேம்படுத்த அரசு அறிவிப்பு: வாரச்சந்தை சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்த வாரச்சந்தை குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொது மக்களுக்கு தங்களது உணவுப் பொருட்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் சந்தையாக விளங்குகிறது.

பழ வகைகள், காய்கறிகள், தின்பண்டங்கள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இந்த சந்தையில் சுமார் 200 கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. திறந்த வெளி சந்தையாக உள்ள காரணத்தினால் மழைக் காலங்களில் வாரசந்தை வளாகம் சேறும் சகதியுமாக ஆகி விடுகிறது. . இந்த வார சந்தையில் கான்கிரீட் தளம் மற்றும் மேற் கூரைகள் அமைத்து அனைத்து வசதிகளுடன் கூடிய வளாகம் அமைக்க வேண்டி, நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் அறிவுறுத்தலின் படி, குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் அரசுக்கு விரிவான திட்ட அறிக்கை மற்றும் வரை படங்கள் அனுப்பி வைத்தார்.

தொடர்ந்து இது தொடர்பாக கோரிக்கை வைத்ததன் பேரில், சட்டசபை கூட்டத் தொடரில் நகராட்சி நிர்வாக துறை மானிய கோரிக்கையின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, குமாரபாளையம் வாரச்சந்தை வளாகம் அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் மேம்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். குமாரபாளையம் வாரச்சந்தை வளாகம் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும் என தமிழக அரசின் அறிவிப்பிற்கு பொதுமக்கள் மகிழ்ச்சியும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.



Updated On: 15 April 2023 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு